Super User

Super User

இந்தியா- கான்பூரில் தொடரூந்து தடம் புரண்டது 100 பேர் பலி

இந்தியாவில் உள்ள பாட்னா இந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் கான்பூர் அருகே இன்று அதிகாலை தடம் புரண்டது. இதில் இது வரை 96 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் 200 பேர் காயமடைந்திருப்பதாகவும் கான்பூர் உயர் போலிஸ் அதிகாரிகளை மேற்கோள் காட்டி பி.டி.ஐ.செய்தி நிறுவனம் கூறியது. காயமடைந்தவர்களில் 76 பேர் நிலை மோசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மொத்தம் 14 பெட்டிகள் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லக்னோ,மத்தியப் பிரதேச மாநிலம் மற்றும் மஹாராஷ்டிராவை இணைக்கும் இந்தப் பாதை ஒற்றை ரெயில் பாதையாக இருப்பதால் பல ரெயில் சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

மூன்று ,நான்கு முறை அதிர்ந்த ரெயில் -- பயணி பேட்டி
விபத்துக்குள்ளான ரெயிலில் பயணம் செய்த , கிருஷ்ண கேஷவ் என்பவர் , விபத்து நடந்த போது மூன்று நான்கு முறை பெரும் அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்ததாகக் கூறினார்.

`` நான் எஸ்-12 பெட்டியில் பயணித்துக் கொண்டிருந்தேன், அப்போது காலை சுமார் 3 மணி இருக்கும்., நான் விழித்துக்கொண்டேன். . எங்கும் ஒரே கூச்சல் குழப்பமாக இருந்தது. ஆனால் எங்கள் பெட்டியில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை`` என்றார் அவர்.

மேலும் கூறிய கிருஷ்ண கேஷவ், ``நாங்கள் எல்லோரும் பெட்டியில் இருந்து இறங்கினோம். வெளியே ஒரே கும்மிருட்டாக இருந்த்து. ரெயில் பெட்டிகள் தடம் புரண்டிருந்ததையும், சில பெட்டிகள் ஒன்றோடு ஒன்று சிக்கிக்கொண்டிருந்ததையும் பார்த்தோம்``, என்றார்.

` அக்கம்பக்கத்திலிள்ள கிராமங்களிலிருந்து பலர் வந்து சிக்கிக்கொண்ட பயணிகளை வெளியே கொண்டுவர உதவினர்,`` என்றார் கேஷவ்.

``போலிஸார் ஒரு மணி நேரத்துக்குப் பின் தான் வந்தனர். ஆம்புலன்ஸ்கள் வந்தன . ஆனால் எங்களுக்கு மேலும் உதவி வேண்டும்`` என்றார் கேஷவ்

ட்ரும்ப் அவர்களை ரஷ்யா பக்கம் சாயாமல் இருக்கு ஒபா முயற்சி

பிரியாவிடை பயணமாக ஜெர்மனியில் பராக் ஒபாமா,பெர்லினில் நடைபெற்ற ஐரோப்பிய தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்று வருகின்றார்.

இந்த கூட்டத்தில் உக்ரேனில் ரஷ்ய தலையீட்டை அடுத்து, ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகளை டிரம்ப் தளர்த்தக் கூடாது என்பதில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஒபாமா தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, முஸ்லிம்கள் பற்றிய பயம் நியாயமானதே என்று சமீபத்தில் டுவிட்டர் பதிவிட்ட ஓய்வு பெற்ற தளபதி மைக்கேல் ஃபிளின்னை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப் நியமித்திருக்கிறார்.
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் தீவிரவாதக் குழுவை எதிர்த்து போராடும் ஒபாமாவின் அணுகுமுறை குறித்தும் ஃபிளின் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

பெண்சாமியாரின் அராஜகம் திருமணவீட்டில் கொலை

இந்தியாவின் வடக்கேயுள்ள ஹரியானா மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒரு திருமண கொண்டாட்டத்தின்போது துப்பாக்கி வேட்டுக்களை வானோக்கி சுட்ட பின்னர் மூன்று நாட்கள் தலைமறைவாக இருந்த பெண் சாமியார், சாத்வி தேவா தாக்கூர், நீதிமன்றம் ஒன்றில் சரணடைந்தார்.

“புனிதப் பெண்” அல்லது “பெண் கடவுள்” என்று பொருள்படும் சாத்வி என்ற இந்தி மொழி சொல்லை தனது பெயரோடு இணைத்திருக்கும் சாத்வி தேவ தாக்கூர், நடன மேடைக்கு சென்று, அவர் விரும்புகிற ஒரு பாடலை ஒலிக்கவிட கேட்டு நடனமாடி, திருமணத்தில் கலந்து கொண்ட விருந்தினரை பிரமிக்க வைத்ததாக இந்திய ஊடகங்கள் கூறின .

எல்லோரும் சூழ்ந்திருக்கும் வேளையில் துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கி அனைவரையும் அவர் பீதி அடைய செய்திருக்கிறார்.மணமகன் மற்றும் மணமகளின் தரப்பினர் அவரை நிறுத்துவதற்கு கேட்டுகொண்டது செவிடன் காதில் ஒலித்த சங்காகிப் போனது.

தவறுதலாக சுடப்பட்ட துப்பாக்கி குண்டு மணமகளின் 50 வயது அத்தை ஒருவரை தாக்கி அவர் கீழே சரிந்தவுடனும், மூன்று உறவினர் படுகாயமுற்ற பின்னரும்தான் இந்த துப்பாக்கிக்சூடு நின்றது.
அப்போது உருவான குழப்பத்தில் சாத்வியும், அவருடைய ஆறு பாதுகாப்பு பணியாளர்களும் தப்பிவிட்டனர்.
அவர்கள் ஏழு பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் அவர்களை பிடிக்க தேடி வந்தனர்.

வெள்ளிக்கிழமை இந்த சாமியார் மேஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நீதிமன்றம் 5 நாட்கள் போலிஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது. அவரது மெய்க்காப்பாளர்கள் இன்னும் பிடிபடவில்லை.
“நான் நிரபராதி, நான் எந்தத் தவறையும் செய்யவில்லை. இது எனக்கெதிராக போடப்பட்ட சதி”, என்று சரணடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் சாத்வி கூறினார். “இந்த நிகழ்வில் ஒருவர் இறந்துவிட்டார் என்பது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன்”, என்றார் சாத்வி.

அனைத்திந்திய இந்து மகாசபை என்ற சிறியதொரு இந்து மத நிறுவனத்திற்கு துணை தலைவராக இருக்கும் சாத்வி தாக்குர், இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் செய்திகளில் அடிபடுவது இது முதல்முறையல்ல.
முஸ்லிம் மற்றும் கிறித்தவ மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு, அவர்களை மலடாக்க வேண்டும் என்று கூறியது தொடர்பாக கடந்த ஆண்டு காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது.
"முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் அதிக குழந்தைகளை பெற்றெடுப்பதை தடுக்கும் வகையில் அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருப்பதற்கு அவர்களை மலடாக்குவது கட்டாயப்படுத்தப்பட வேண்டும்" என்று அவர் ஒரு கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

தங்களுடைய நாட்டில் சிறுபான்மையினரின் மதமாக மாறுகின்ற அச்சுறுத்தலை தடுக்கும் வகையில், இந்து மத பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுகொள்ள வேண்டும் என்கிற இந்து மத தேசியவாத தலைவர்களின் பரிந்துரைகளை ஏற்றுகொள்வதாக சாத்வி தெரிவித்திருக்கிறார்.

"நீளமாக சென்று கொண்டிருக்கும் ஒரு கோட்டோடு நீங்கள் எவ்வாறு போட்டியிட முடியும்? அதற்கு பக்கத்தில் அதனைவிட நீள கோடு ஒன்றை வரைவதன் மூலம் தான்" என்று அவர் கூறியிருக்கிறார்.
இன்னொரு சர்ச்சைக்குரிய கருத்தாக, மசூதிகளிலும், தேவாலயங்களிலும், இந்து மத ஆண் மற்றும் பெண் கடவுள்களின் சிலைகள் வைக்கப்பட வேண்டும் என்றும், மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற நாதுராம் கோட்ஸேவின் சிலை ஒன்று ஹரியானாவில் நிறுவப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளதாக டிஎன்எ செய்தித்தாள் சாத்வியை மேற்கோள் காட்டியுள்ளது.

சாத்வி சர்ச்சைக்குரிய வகையில் செய்திகளில் அடிபடுவது இது முதல்முறையல்ல
’தங்கம் , துப்பாக்கி விரும்பி’
கர்னால் மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமமான பிராஸில், சாத்வி பிறந்து வளர்ந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்னால், அந்த கிராமத்தில் ஆசிரமம் ஒன்றை நிறுவியிருக்கிறார். அவரை பின்பற்றும் சிலரில் பெரும்பாலோர் உள்ளூர் கிராமவாசிகளாவர்.

நவீன வாழ்க்கைப்பாணியால் பிரபலத்தை தேடுபவராக சாத்வி அறியபடுகிறார் என்று உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.

தலை முதல் கால் வரை எப்போதும் காவி ஆடை அணிந்திருக்கும் 27 வயதான சாத்வி, பொன் ஆபரணங்கள் மற்றும் துப்பாக்கி விரும்பியாக தோன்றுகிறார்.

சகோதரர் ராஜீவ் தாக்குரால் நடத்தப்படும் அவருடைய முகநூல் பக்கம், சாத்வியை தேவா இந்திய பவுண்டேஷனின் இயக்குநர் என்றும், ஒரு தேசியவாதி என்றும் விவரிக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இந்து மகாசபையில் இணைந்தார்.
சாத்வியோடு அவர்களது கட்சியின் டெல்லியிலுள்ள தலைமையகத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பயணம் மேற்கொண்டதாக ஹரியானாவிலுள்ள இந்து மாகா சபை மூத்த உறுப்பினர் தராம்பால் சிவாச் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

"நான் அவருக்கு சார்பாக பேசிய பின்னர் கட்சியின் தேசிய துணை தலைவராக சாத்வி நியமிக்கப்பட்டார்" என்று அவர் கூறியிருக்கிறார்.

"அவர் துப்பாக்கிகளோடு புகைப்படங்களை எடுத்துகொள்வது எங்களுக்கு மிகவும் அசௌகரியம் அளித்தது. அதனால், எங்களுடைய கொண்டாட்டங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் சாத்வியை அழைப்பதை விரைவில் நிறுத்திவிட்டோம்".

சாத்வி ஓர் ஆயுத விரும்பி என்பதற்கு செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சோக சம்பவத்தின் காணொளி ஒரு சான்றாகும்.
இப்போது, சாத்வி தன்னை தானே சிக்கலுக்குட்படுத்திக்கொண்டதாகவே தோன்றுகிறது.

மாலைதீவுகு விபச்சாரத்திற்காக பெண்களை அனுப்பியவர்கள் கைது

மாலைதீவில் உள்ள பிரபல செல்வந்தர்களுக்கு விபசாரத்திற்காக இலங்கையில் இருந்துபெண்களை அனுப்பி வந்த கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை விபசாரத்திற்காக மாலைதீவிற்கு இவர்கள் அனுப்பிவைத்துள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய பத்தரமுல்ல பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்ததுள்ளது.

இரு சந்தேகநபர்களும் நூற்றுக்கும் அதிகமான பெண்களை விபசாரத்திற்காக மாலைத்தீவிற்கு அனுப்பி வைத்துள்ளதுடன் சுற்றுலா வீசாவில் பெண்களை மாலைத்தீவிற்கு அனுப்பிவந்துள்ளமை விசாரணைகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடுவல நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போராளிகளுக்கு உதவ அரசு முன்வரவேண்டும்: சிங்கள அமைச்சர்

போரில் இறந்தவர்களையும் நினைவு கூர்வதற்கும் ஊனமுற்ற புலிப்போராளிகளுக்கு உதவவும் அரசாங்கம் முன்வரவேண்டும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

ஜே.வி.பி கலவரத்தில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடி இறந்தவர்களை நினைவுகூர இடமளித்துள்ள தை சுட்டிக்காட்டி அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

அங்கவீனமுற்ற படையினருக்கு வாழ்வதற்கு அரசாங்கம் உதவிவருகிறது. இதேபோன்று யுத்தத்தினால் அங்கவீனமுற்ற விடுதலைப்புலி இளைஞர்களும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

வரவு- செலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான மூன்றாவது நாள் விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயங்களை குறி ப்பிட்டார்.

வன்னி பிரதேசத்தில் கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவ ற்றை டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மோதல் ஏற்படாத வகையில் பிரச்சினைகளு க்குத் தீர்வு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

யுத்தத்தினால் அங்கவீனமுற்ற படையினருக்கு வாழ்வதற்கு வழியமைக்கப்பட்டுள்ளது. ஆனால் யுத்த த்தினால் அங்கவீனமுற்ற விடுதலைப்புலி இளைஞர்களும், இறந்தவர்களின் குடும்பத்தினரும் அநாதரவாக உள்ளனர்.இவர்களும் மனிதர்களே அவர்களுக்குச் செய்ய வேண்டிய சேவை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்திவருவதாகவும் அமைச்சர் கூறினார்.

வடமராட்சியில் பேரூந்து மீதுகல்வீச்சு

இன்று அதிகாலை 5.20 மணியளவில் யாழ் பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இ.போ.ச பேருந்து மீது,இனந்தெரியாதோர் கற்களால் வீசித் தாக்குதல் மேற்கொண்டுள்ள தாக, பருத்தித்துறை டிப்போ முகாமையாளர் கே. கந்தசாமி தெரிவித்தார்.

நெல்லியடி கொடிகாமம் வீதி அணஞ்சிலடியில் வைத்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இச் சம்பவத்தினால் பேருந்தின் பின்பக்கக் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. எனினும், பயணிகளுக்கு காய ங்கள் ஏதும் ஏற்படவில்லை.

சம்பவத்தையடுத்து, பருத்தித்துறை டிப்போவில் இருந்து மாற்று பேருந்தொன்று அனுப்பி வைக்கப்பட்டு, அதில் பயணிகள் பயணத்தை மேற்கொள்ள முடிந்ததாக, முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

போலி செய்திகள்; கூகிள் நடவடிக்கை

அரசியல் மற்றும் வியாபார நோக்கம் கருதி வெளியாகும் போலி செய்திகளை உள்ளடகிய இணைய தளங்களை தாம் தடை செய்யக்கூடும் என கூகிள் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

கூகிளில் நாங்கள் சில விழுமியங்கள் குறித்து அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். கருத்துச் சுதந்திரத்தை கூகிள் மதிப்பளித்து, அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்கிறது எனவும் சுந்தர் பிச்சை பிபிசியிடம் தெரிவித்தார்.

அண்மையில் ஏற்பட்ட சில குறைபாடுகளில் இருந்து கூகிள் கற்றுக்கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாவீரர் நாள் அனுட்டிக்க அனுமதிக்கவேண்டும்: சிவசக்தி ஆனந்தன்

கடந்த 30 வருடகாலத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிர்நீத்த போராளிகள் மற்றும் எங்களுடைய உறவுகளுக்கு இந்தக் கார்த்திகை மாதத்தில் நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு இந்த நாடாளுமன்றம் அனுமதியளிக்கவேண்டும் - இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செவவுத்திட்டம் மீதான மூன்றாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறித்த கோரிக்கையை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தினால் உயிர்நீத்த எம் உறவுகள் மற்றும் போராளிகளுக்கு இந்த கார்த்திகை மாதத்தில், இச்சபையில் அஞ்சலியை தெரிவித்துக்கொள்கின்றேன். எனினும், உயிர்நீத்த எம் உறவுகள் மற்றும் போராளிகளை, நினைவு கூர்வதற்கு கடந்த அரசினால் தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், உயிர்நீத்தோரை இந்த கார்த்திகை மாதத்தில் நினைவுகூர்வதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் அனுமதியளிக்கவேண்டும். அதுமட்டுமன்றி உயிர் நீத்தவர்களுக்கு சர்வதேச சட்டத்தின் பிரகாரம் நட்டஈடுவழங்குவதற்கும் இந்த நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…