எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இந்தவார இறுதியில் கலந்தாலோசிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
18 பொலிஸ் துணை அத்தியட்சகர் உட்பட 208 பொலிஸ் அதிகாரிகளின் திடீர் இடமாற்றங்களினால் பொலிஸ் தரப்பிற்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கொழும்பு இணைய தளம் ஒன்று கூறுகின்றது.
அரச துணைக்குழுவான ஈ.பி.டி.பி யின் தலைவர் டக்ளஸ் அவர்கள் எதிர்வரும் பொது தேர்தலில் தனித்து போட்டியிடுவார் என அவரது செய்தி தொடர்பாளர் நெல்சன் எதிரிசிங்க கூறியுள்ளார்.
பொது தேர்தலில் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய இடங்களில் ஆழும் பொதுசன ஐக்கிய முன்னணி வெற்றி பெறும். அதன் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணத்தை மேம்படுத்தும் நோக்கில் யாப்பில் மாற்றம் கொண்டு வருவ்வோம்.
எமது நாட்டிற்கு விகுதாசார தேர்தல் முறைமை சரிவராது அதனை மாற்றவேண்டும். தேர்தல் முறையே தேர்தல் வன்முறைகளுக்கு காரணம் என கூறியுள்ளார் யாப்பு மறு சீரமைப்பு அமைச்சர்.
இன்று மாலை கைது செய்யப்பட்ட சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார். இராணுவ இரகசியங்களை வெளியிட்டமை மற்றும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை கொலை செய்ய திட்டமிட்டமை போன்றவற்றுக்காகவே விசாரணை செய்யப்படவுள்ளார். இவ்வாறு ஊடக அமைச்சர் லக்ஸ்மன் ஹலுகல்ல தெரிவித்துள்ளார்.
வெளி நாடு ஒன்றில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டுவரப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவரையும், விமான எதிர்ப்பு ஏவுகணையால் எம்.ஐ உலங்கு வானூர்தியினை சுட்டு வீழ்த்திய புலி ஒருவரையும் விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாம்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியுடனோ அல்லது எதிர்க் கட்சியுடனோ இணைந்து போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொலைதொடர்பு திணைக்களம் இணைய தளங்களை மிக உன்னிப்பாக கண்காணிக்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதுடன் குறிப்பாக Face book, Twitter போன்ற சமூக தொடர்பு தளங்களை விசேடமாக கண்காணிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
தேர்தல் முடிவுகள் மஹிந்தவுக்கு சாதகமாக வந்தால் மஹிந்த இராசபக்ஷவை கொலை செய்வதற்கும், கலகங்கள் செய்வதற்கும் சரத் பொன்சேகா திட்டமிட்டு இருந்ததாக இது தொடர்பாக விசாரணை நடாத்தி வரும் பொலிசார் கூறியுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில்; தமிழ் மக்களை அதிகளவில் கொண்ட பிரதேசங்களில் கருணாவின் விசுவாசியும் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான இனியபாரதி ஐ.ம.சு கட்சி என்ற பெயரில் அலுவலங்களை திறந்து அதன்மூலம் மக்களுக்கு தொடர்ந்தும்அசௌகரியங்களை ஏற்படுத்தி வருவதக அம்பாறை மாவட்ட செய்திகள் கூறுகின்றன.
பொது தேர்தலில் தமிழ் மக்களது வாக்குகளை பெறவேண்டுமாயின் தனித்து போட்டியிடவேண்டும் அப்போதுதான் வெல்ல முடியும் வென்ற பின்னர் வருகின்ற அரசுடன் கூட்டு சேரலாம் என்பதே பிள்ளையான் கட்சியின் கூடுதலான அங்கத்தவர் விருப்பமாம்.
இரஸ்ய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாஆயுத உதவியினை இலங்கைக்கு கடனாக வழங்குகின்றது. அத்துடன் இரட்டிப்பு பாவனை ஒப்பந்தத்திலும் கையெழுத்து இட உள்ளது இவ்வாறு பி.ரி.ஐ செய்தி ஸ்தாபனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
யாழ்.காங்கேசன்துறை வீதியை விஸ் தரிக்கும் போது 27இந்து ஆலயங்களும், பழம்பெரும் கலாசாரச் சின்னங்களும் பாதிக்கப்படும் அல்லது அழிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் யாழ்.இந்து மக்களும் இந்து நிறுவனங்களைச் சேர்ந்தோரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இலங்கை தமிழ் அகதிகள் 40 பேர் கப்பல் ஒன்றில் கிறிஸ்மஸ் தீவை வந்தடைந்ததாக அவுஸ்ரேலிய அகதிகள் சபை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 10 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்ட இவர்கள் நேற்று கிறிஸ்மஸ் தீவுக்கு வந்தடைந்ததாகவும் கூறப்படுகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இலண்டன் வந்துள்ளார். நேற்று முந்தினம் வந்துள்ள சம்பந்தன் அவர்கள் தனது சகோதரரின் மரணக்கிரிகைகளில் கலந்து கொள்வதுடன் தனது கொள்கைகளுக்கு ஆதரவான புலம் பெயர் மக்களில் சிலரையும் சந்திப்பார் என இலண்டன் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ்ச் சமூகம் என்பது தனித்துவம்மிக்கதொரு இனமாகும். வடக்கு, கிழக்கு என்பது தமிழரின் பூர்வீகத் தாயகம் என்ற உண்மையை உணர்த்தியுள்ள தமிழ் மக்கள் தமக்கு ஏற்றதான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதையும் தேர்தல் முடிவுகளில் வலியுறுத்தியுள்ளனர்.
வட பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றி இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்ற அவசர காலச் சட்டம் தேவையெனில் ஏன் நாடு முழுவதும் அச்சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்? வடபகுதியில் மட்டும் அதை அமுல்படுத்தலாமே?" என ஐ.தே.கட்சி எம்.பி.லக்ஷ்மன் செனவிரத்ன கேள்வி எழுப்பினார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது வட-கிழக்கு மாவட்டங்களிலுள்ள தமிழ் மக்களின் வாக்குகளை சிதறச் செய்து , நாடாளுமன்ற தமிழ் பிரதிநிதித்துவத்தை கணிசமான அளவு குறைக்கும் நடவடிக்கைகளில் திரைமறைவுச் சதி ஒன்று தீட்டப்பட்டு வருவகின்றது. என
சர்வதேசம் இங்கு எந்த விசாரணையை நடத்தக் கேட்டாலும் நான் ஒரு போதும் அதற்கு அனுமதிக்கப் போவதில்லை. நான் அதனை முற்றாக எதிர்க்கிறேன். ஏனெனில் அவ்வாறான விசாரணைக்கு இங்கு எந்த அவசியமும் இல்லை.
பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இராணுவப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாளை திங்கட்கிழமை முதல் இராணுவப் பேச்சாளருக்கான கட மையை அவர் பொறுப்பேற்கவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வன்னிப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள போர்ப் பேரழிவுகள் அங்கு வாழ்ந்த மக்களின் எதிர்காலத்தை அச்சுறுத்துகின்றன.வன்னிப் பகுதியின் எந்தத் திசையை நோக்கினாலும், மனதால் நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு அது நாசமடைந்திருப்பதையே காணமுடிகிறது.