Super User

Super User

தமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் அமைதியான முறையில் ஒரு வார காலமாக அறவழிப் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தின்போது இனிமேல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களைக் குடிக்க மாட்டேன் என்று இளைஞர்கள் அறிவித்தனர். இளைஞர்களின் இந்த முடிவு சமூக வலைதளங்களின் மூலம் தீயாக பரவியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கடைகள், திரையரங்குகள் ஆகியவற்றில் இனிமேல் பெப்சி, கோக் விளம்பரம் செய்யப்பட மாட்டாது என அறிவித்தன.

இந்நிலையில் இதுதொடர்பாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா இன்று விழுப்புரத்தில் அளித்த பேட்டியில், ''மார்ச் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய நாட்டு குளிர்பானங்கள் விற்கப்படாது. உடலுக்குத் தீங்கு விளைவிப்பதால் அந்நிய நாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

தமிழக பொலிசாரின் அராஜகம்: மனித உரிமை ஆணையகம் விசாரணை

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டமை, காவல் துறையினரே குடிசைகளுக்கு தீ வைத்தது, வாகனங்களை கொளுத்தியது போன்ற நிகழ்வுகள் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த ஒரு வாரமாக, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டதால் பல இடங்களில் போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இருந்த போதும், மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் நிரந்தர சட்டம் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து அங்கிருந்து வெளியேற மறுத்தனர்.

இந்த விவகாரம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் அளித்துள்ள செய்தி அறிக்கையில், ''சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை அப்புறப்படுத்தும் போது மேற்கொண்ட நடவடிக்கைகளையின் போது ஏற்பட்ட வன்முறையில் மாணவர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள ரத்தம் வழிய ஓடிய காட்சிகள், காவல் துறையினர் பலரின் வீடுகளுள் சென்று மக்களை கடுமையாக தாக்கியது போன்ற காட்சிகள் தொலைக்காட்சிகளில் கண்ணபிக்கப்பட்டன. இது குறித்த விளக்கம் அளிக்க வேண்டும்,'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறை ஏற்பட்டபோது காவல் துறையினர் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும்,இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலர் மற்றும் காவல் துறை இயக்குநர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிக்குவாக மாற்றப்பட்ட இஸ்லாமிய தமிழ் சிறுவன்

மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார் முஸ்லிம் தாய் ஒருவர். அவரது மகன் திம்புலாகல வன ஆச்சிரமமொன்றில் இணைக்கப்பட்டுள்ளார்.

7 வயதுடைய இந்த சிறுவந்தற்போது பௌத்த துறவியாக மாற்றபப்ட்டுள்ளார்.

இச் சம்பவம் குறித்து திம்புலாகல வன ஆச்சிரமத்தின் தலைமை தேரர் மிலானே சிறியலங்கார தேரர் தெரிவிக்கையில்,

சிங்கள இனவாத அமைப்புக்களும் தேரர்களும் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறார்களை மதமாற்றம் செய்வது இது புதிய விடயம் அல்ல.

பிள்ளையானின் மேன் முறையீட்டை விசாரிக்க முடிவு

பிள்ளையான் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தன்னை விடுவிக்குமாறு உத்தரவிடக் கோரி, இவர் குறித்த மனுவை தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2005.12.25 ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில்; கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

நான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்

தேச விரோத சக்திகள் போராட்ட களத்தில் புகுந்துவிட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி, மாணவர்கள் சென்னை மெரினாவில் நடத்திய அறவழி போராட்டம் நேற்றுடன் முடிவிக்கு வந்தது. முன்னதாக போலீஸ் திடீரென நடத்திய தடியடியால் தமிழகமே போர்க்களமானது.

இப்படி தடியடி நடத்த காரணமே, மாணவர்கள் போராட்டத்திற்கு உள்ளே தேச விரோத சக்திகள் புகுந்து அவர்களை திசை மாற்ற முற்பட்டதுதான் என்று காவல்துறையும், அரசும் தெரிவித்துள்ளது (சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்றில், அரசு வக்கீலும் இதையே குறிப்பிட்டார்). இந்நிலையில், இன்று சென்னையில் பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசனிடம் நிருபர்கள் இக்கேள்வியை முன்வைத்தனர். கமல்ஹாசன் கூறியதாவது: தமிழகம், மைசூர் உட்பட பல மாகாணங்கள் இந்தியாவுடன் இருக்க முடியாது என கூறி ஒரு காலத்தில் தனி நாடு கேட்டவைதான்.

மேனன் மற்றும் பட்டேல்தான் அலைந்து திரிந்து ஒவ்வொரு மன்னர்களாக போய் பார்த்து, பேச்சுவார்த்தை நடத்தி இந்தியா என்ற ஒரு நாட்டை ஒருங்கிணைத்தனர். இதன்பிறகு இந்தியாவின் முதல் குடியரசு தினம் கொண்டாடப்பட்டபோது, பிரிவினை பேசியவர்கள் எல்லோருமே குடியரசு தின விழாவில் மகிழ்ச்சியோடு பங்கேற்றனர். எனவே பிரிவினை பேசுகிறார்கள் என்பதற்காக அவர்களை ஒடுக்க நினைக்காமல், பிரிவினை கேட்பவதற்கான காரணத்தை அவர்களிடம் கேட்டு அதை நிவர்த்தி செய்யுங்கள்.

'தெற்கு தேய்கிறது' என கோஷம் எழுந்தால் அதை மதித்து ஏன் அப்படி கோஷம் எழுகிறது என்பதை பார்த்து நிவர்த்தி செய்யுங்கள்.நம்மை புறக்கணிக்கிறார்கள் என்ற எண்ணம் சில மக்களிடம் ஏற்பட பல வரலாற்று காரணங்கள் உள்ளன. அதை நீங்களே ஆராய்ந்து பார்த்துக்கொள்ளுங்கள்.

தமிழகத்தை, ராவண பூமி என்று விமர்சனம் செய்து, தமிழகத்தை புறக்கணித்தவர்களும் இருந்தனர். என்னை பார்த்து கூட நீங்கள் ராவண பூமியிலிருந்து வருகிறீர்களா என கேட்டவர்கள் உண்டு. "நானே ராவணன்தான்" என்று அவர்களுக்கு பதில் அளித்துள்ளேன். ஒவ்வொரு வெறுப்புக்கு பிறகும் ஒரு வரலாற்று காரணம் உண்டு.

அமெரிக்காவில் கூட பிரிவினைவாதம் பேசுவோர் உண்டு. அதையெல்லாம் சரி செய்ய வேண்டியதுதான் ஆட்சியாளர்கள் கடமை. ஜல்லிக்கட்டு பிரச்சினையை அரசு இன்னும் திறம்பட தீர்த்து வைத்திருக்க முடியும் என்று நம்புகிறேன். மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பின் அடையாளம்தான் ஜல்லிக்கட்டு போராட்டமாக வெடித்துவிட்டது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதையே ஜல்லிக்கட்டு போராட்டம் நமக்கு உணர்த்துகிறது. இவ்வாறு கமல் தெரிவித்தார்.

பொலிசாரே வன்முறையினை ஆரம்பித்தார்களா ?கமல் அதிர்ச்சி

சென்னையில் போலீசார் கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் நடிகர் கமல்ஹாசன். அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டும் விலங்கு வதை நடப்பதாக கூறி அதை எதிர்ப்பது தவறு. யானைகளுக்கு சங்கிலி போட்டு கட்டி வைப்பதும் கொடுமைதான்.

பட்டாசு வெடிப்பதால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதும் உண்மைதான். அதை நாம் பாரம்பரியம் என்ற பெயரில் அனுமதிக்கும்போது ஜல்லிக்கட்டையும் அனுமதிக்கலாம். ஆண்டு முழுக்க காளைகளை அதனை வளர்ப்போர் அக்கறையாகத்தான் பார்த்துக்கொள்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு விஷயத்தில் மட்டுமே இரட்டை நிலைப்பாட்டை எடுப்பவர்களைதான் கேள்வி கேட்கிறோம். போலீசாரே கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளேன். தீ வைத்தது உண்மையிலேயே போலீசாராக இருக்க கூடாது என விரும்புகிறேன். கலவரத்தில் ஈடுபட்டது காக்கி சட்டை அணிந்திருந்தாலும், அவர்கள் என்னை போன்ற நடிகர்களாகதான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

விலங்குகளை காப்பாற்ற விலங்குகள் நல வாரியம் போதுமே பல்வேறு அமைப்புகள் ஏன் என்ற சந்தேகம் உள்ளது. ஜல்லிக்கட்டில் இறப்பவர்களை விட சாலை விபத்தில் இறப்பவர்களே அதிகம். மோட்டார் பைக் ரேஸ் ஆபத்து என்பதற்காக தடை விதிக்க முடியுமா? பீட்டாவுக்கு தடை போட வேண்டும் என்று நான் கோரவில்லை. ஏனெனில்,

ஜனநாயக நாட்டில் பல அமைப்புகளும் செயல்பட இடமுள்ளது. அதேநேரம், அமைப்புகளை வரைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். தடை செய்ய வேண்டும் என்று கோர ஆரம்பித்தால் விஸ்வரூபம் படத்தையும் தடை செய்ய வேண்டிதான் வரும்.

மைத்திரி, ரணில் ஆகியோருக்காக வாதாடும் சம்பந்தன்

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியையும் ஊழல்வாதிகள் என்று குற்றஞ்சாட்டிக் கொள்கின்றனர் எனினும் மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் ஊழல்வாதிகள் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
 
ஊழல் பற்றி நீங்கள் பேசி வருகின்றீர்கள். அவ்வாறு பேசிப் பேசியே நீங்கள் மக்களை  முட்டாளாக்குகின்றீர்களா? ஊழல் பற்றி பேசுகின்றீர்கள் அப்படி இடம்பெற்றிருந்தால் ஊழலுக்கு எதிராக நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட நபர் யார்? அவ்வாறு ஒரு நபர் இருக்கிறாரா? என்றும், சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற பிணைமுறி மோசடி தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ட்ரம்புடன் நட்பாக இருக்க விருப்பம்: மைத்திரி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் அரசாங்கத்துடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 45 ஆம் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டுள்ள டொனல்ட் ட்ரம்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ட்ரம்ப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இதற்கான வாழ்த்துச் செய்தியில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் ஊடாக ஜனாதிபதி இந்த வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

திருமலை துறைமுகம் பற்றி பேசவே இல்லையே: இந்தியா

திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் இலங்கை-இந்தியா இடையே எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, திருகோணமலை துறைமுக அபிவிருத்தியை இந்தியா வசம் ஒப்படைக்க இலங்கை-இந்திய அரசுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக, டெல்லி சென்றுள்ள அமைச்சர் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தியை சீனா வசம் ஒப்படைத்திருக்கும் நிலையில், சீனா மற்றும் இந்தியாவுடன் சமமான உறவு நிலையைக் கடைப்பிடிக்க எண்ணியே இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

ஆயினும், இந்தத் தகவலை மறுத்திருக்கும் இந்தியா, இதுபோன்ற சம உறவு முறையைக் கடைப்பிடிப்பதற்காக ஏற்படுத்தப்படும் ஒப்பந்தங்களில் தான் ஆர்வம் காட்டுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, திருகோணமலை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தில் ஒப்பந்தங்களை மேற்கொள்வதனால் நீண்ட கால அடிப்படையில் பெரும் நன்மைகள் கிட்ட வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பை இந்தியா மறுத்ததான் பின்னரே அது சீனாவுக்கு வழங்கப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய நாசகார ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ரஷ்யா

புதிய வகை தொழிநுட்பம் மற்றும் நவீன கதிர்வீச்சு தாக்குதல்கள் திட்டத்தை பலப்படுத்தும் வகையிலான நவீன ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியை ரஷ்யா தொடங்கியுள்ளது.

வளர்ந்துள்ள தொழிநுட்ப விருத்தியிற்கேற்ப எதிர்கால சந்ததியினர் பயண்படுத்தும் வகையிலான, ஆயுத உற்பத்தியை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்புதுறை பிரதி அமைச்சர் யூரி போரிசோவ் தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டத்தின் மூலம் மின்காந்த சக்தி (electromagnetic), கதிரலைசக்தி (plasma) மற்றும் அதிவேக ஏவுகனைகள் (hypersonic missiles) என்பவற்றை மையப்படுத்தியதான ஆயுதங்களை உற்பத்தி செய்வதே அந்நாட்டின் திட்டமாக போரிசோவ் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த ஆயுதங்கள் யாவும் எதிர்கால பயண்பாட்டிற்கு ஏற்புடைய ஆயுதங்கள் என்பதோடு, அவற்றின் அழிவு சக்திகளும் மிக அதிகமானதாகும். அத்தோடு அதிவேக ஏவுகனைகளான (Mach 5) ஒலியின் வேகத்தைவிட ஐந்து மடங்கு வேகமுடையனவாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.


புதிய வகை ஆயுதங்கள் யாவும் நவீன கட்டுபாட்டு விதிகளுடன் உருவாக்கப்படுகின்றன. மேலும் இதுவரைகாலமும் ஆயுத தாக்குதல்களுக்கு பிரயோகிக்கப்படாத, இயற்பியல் விதிகளுடன் இயங்ககூடிய ஆயுதங்களை, உலகிற்கு அறிமுகப்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…