 
                Super User
சாதிக்கொடுமை, பெண்ணொருவர் எரித்துக்கொலை
இருவரின் காதல் பற்றி தெரிந்துகொண்ட பானுவின் பெற்றோர் தங்களது மகள் வயது குறைவானவள் என்றும் சயபன்னா தங்களது மகளை மயக்கியுள்ளதாகவும் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவல்துறையின் உதவியை நாடினர்.
கடந்த ஜனவரி 24ம் தேதி சயபன்னா-பானு ஜோடி ஊரைவிட்டு வெளியேறி, திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. சனிக்கிழமையன்று கிராமத்திற்கு திரும்பிய அவர்கள், பானுவின் பெற்றோரிடம் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கொண்டுவந்திருப்பதாகக் கூறி, பானு கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
ஆனால் பானுவின் பெற்றோர் இதை வரவேற்கவில்லை. மாறாக, பானுவின் தந்தை இந்த உறவை முடித்துக்கொள்ளுமாறு தெரிவித்தார்.
கிளினொச்சி கசிப்பு ,கஞ்சா விற்பனை உச்சத்தில்
இதில், 650 இற்கும் மேற்பட்ட பனை தென்னை வள தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். குறித்த தொழிலாளர்கள் தாம் உற்பத்தி செய்யும் கள்ளினை குறித்த நிலையங்களில் வழங்கியே பிள்ளைகளின் படிப்புச் செலவு தொடக்கம் அன்றாட வாழ்க்கைச் செலவு வரை அனைத்திற்கும் இந்த தொழிலையே நம்பி வாழ்கின்றனர். இவர்களின் உழைப்பை நம்பியே அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்ந்துவருகின்றனர்.
எனவே, தாம் நாற்பது அல்லது ஐம்பது அடி உயரமான மரங்களில் ஏறி மிகவும் அபாயகரமான நிலையில் தொழிலில் ஈடுபட்டுவரும் நிலையில், சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் சட்டவிரோதமான கசிப்பு விற்பனையாளர்களினால் தமது குடும்பம் வாழ்வாதாரத்தினால் பாதிக்கப்பட்டு வறுமைக்கு தள்ளப்படும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் சம்பந்தமாக கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் எஸ்.துரைசிங்கமிடம் கேட்டபோது, கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது அதிகரித்துக் காணப்படும் கசிப்பு மற்றும் கஞ்சா விற்பனையால் பனை தென்னை வள தொழிலாளர்கள் என்றுமில்லாதவாறு பாரிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
அதுமட்டுமல்ல கள் விற்பனையில் வீழ்ச்சி நிலையும் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் செயற்றிட்டங்களை முன்னெடுத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
20வது தமிழர் விளையாட்டு விழா.
பாரிசின் மிகப்பெரிய பூங்கா – மைதானமான லு புசே (le Bourget) L’Aire des Vents Dugnyபூங்காவில் பல்லாயிரக்கணக்கில் தமிழ்மக்கள் ஒன்றுகூடி – ஒருதாய் பிள்ளைகளாய் முழுநாள் பொழுதைக்கழிக்கும் மாபெரும் தமிழர் விழா. 20வது தடவையாக எதிர்வரும் 02.07.2017 ஞாயிறன்று நிகழவுள்ளது.
பிரான்ஸ் இளம் தமிழ் தலைமுறைக்கும், மூத்த தலைமுறைக்கும் இடையேயான பண்பாட்டுகைகோர்ப்பு
தமிழால் ஒன்றுபட்டு - திரண்டால் மிடுக்கு
பத்தொன்பதாண்டுகளுக்கு முன்னர் பிரான்சு வாழ் ஈழத்தமிழ்சமூகத்தின் மத்தியில் சமூக - பண்பாட்டு - விளையாட்டுத்தளத்தில் நட்புறவினை மேம்படுத்தவும் - உருவாகிவரும்அடுத்ததடுத்த தலைமுறைகளிடையே புரிதலை ஏற்படுத்துதற்குமானதொரு வழிமுறையாகதமிழர் விளையாட்டுவிழா உருவாக்கப்பட்டது. மகிழ்வூட்டும் நிகழ்வாகவும் - பாரம்பரியங்களை நினைவூட்டும் நிகழ்வாகவும் இது வடிவமைக்கப்பட்டது.
பிரான்சு தழிழ் சமூகத்தின் மத்தியில் நிலவும் சமூக நெருக்குவாரங்கள் - பண்பாட்டுபுரிதல்கள் - பாரம்பரியம் தொடர்பான அறிமுகங்கள் என்பனவற்றினைஆரோக்கியமானமுறையில் எதிர்கொள்வதற்கான சமூக செயற்பாடுகளை எதுவிதபுறஅழுத்தங்களுக்கும் இடம்கொடுக்காது தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்கின்றஎமது திடசங்கற்பமே தொடர்ந்தும் தமிழர் விளையாட்டு விழாவினை முன்னெடுக்கவைக்கின்றது. பெரும் பொருளாதார நெருக்கடிகள், எதிர்காலம் பற்றிய எதுவித புரிதலுமற்றசில தரப்புக்களின் அழுத்தங்கள் என்பனவற்றினை தாண்டியும் நாம் இந்தசெயற்பாட்டிற்காக உழைக்கின்றோம்.
ஒரு சமூக செயற்பாடாக - எதிர்காலம் பற்றிய விஞ்ஞானபூர்வமான நடவடிக்கையாக - தலைமுறைகளை ஒன்றிணைக்கும் பண்பாட்டு நிகழ்வாக இவ்வாண்டும் தமிழர்விளையாட்டுவிழா பெரும் நிகழ்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கானஆதரவினை வழங்குமாறு உரிமையுடனும் - பொறுப்புணர்வுடனும் உங்களைகோருகின்றோம்.
நிகழ்வுகளுக்கான ஆதரவு - பொதுவான ஆதரவு என்கின்ற வடிவத்தில் உங்கள்பொருளாதார உதவிகளை வழங்குமாறு தாரளமனங்கொண்டவர்களிடம் கோருகின்றோம்.
நிகழ்வில் குடும்பம் குடும்பமாகப் பங்கேற்று - தலைமுறைகளை ஒருங்கிணைத்து - பிரான்சுதமிழ்சமூகத்தினை செழுமைப்படுத்திட வாருங்கள் என அனைவரையும் அழைக்கின்றோம்.
நிகழ்வில் இளையதலைமுறையினர் அறிந்திராத பாரம்பரிய தமிழர் விளையாட்டுக்களானகிளித்தட்டு, சங்கீதக்கதிரை, முட்டியுடைத்தல், தலையணைச்சண்டை, கயிறுழுத்தல்போன்ற விளையாட்டுக்களுடன், கரப்பந்தாட்டம், கரம், சதுரங்கம் இன்னும் பல வேடிக்கைவினோத விளையாட்டுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக குறுந்தூர மரதனும்மைதானத்தில் நடைபெறவுள்ளது, பங்குபற்ற விரும்பும் போட்டியாளர்கள் பதிவுகளைமேற்கொள்ளவும்.
கரப்பந்தாட்டம், கிளித்தட்டு மற்றும் குழு விளையாட்டுக்களில் பங்குபற்ற விரும்புபவர்கள்மைதானத்தில் விளையாட்டுக்கான பணிமனையில் குழுக்களை பதிவு செய்து இணைந்துகொள்ளலாம்.
இசைநிகழ்வில் கலந்து கொண்டு பாட விரும்புவோர், மேற்கத்தேயநடனம் ஆடவிரும்புவோர்,கலை நிகழ்ச்சிகளை வழங்க விரும்புவோர் எமது பணிமனையில்இ கலைப்பிரிவுடன்தொடர்பு கொண்டு இணைந்து கொள்ளலாம். சிறப்பாக தெருக்கூத்து, நாட்டுக்கூத்துபோன்ற நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் பல்வேறு தமிழர் சமூக அமைப்புக்களினதும், வர்த்தக நிவனங்களினதும் காட்சிஅறைகளும் மைதானத்தில் அமைக்கப்படவுள்ளது.
மைதானத்தில் விளம்பர வியாபார கடைகளை நிறுவ விரும்பும் வியாபார நிறுவனங்கள்எமது பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்
விழா சிறப்பு மலர், துண்டுப்பிரசுரங்கள், பெரிய விளம்பர பிரசுரங்கள் ஆகியவற்றில்விளம்பர்கள் செய்ய விரும்புவோர்இ விழாவிற்கு உதவ விரும்புவோர் உடனடியாக எமதுபணிமனையுடன் தொடர்பு கொள்ளவும்
கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக ஈழத்தில் இருந்து கேட்கும் அவலக்குரல்களுக்குஆதரவுக்கரம் கொடுக்கும் ஒரே நோக்குடன் இன்றும் தனது சேவையைத்தொடர்ந்துகொண்டிருக்கும் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் கடந்த 19 வருடங்களாகதமிழர் விளையாட்டு விழா எனும் நிகழ்வை வருடாவருடம் சிறப்புற நடாத்துவதன் மூலம்தாயக உறவுகளை மனதில் நினைந்து பிரான்ஸ் வாழ் தமிழர்கள் அனைவரும் வருடத்தில்ஒரு முறை ஒன்றாக ஒன்று கூடவும் அதனுடாக அன்று கிடைக்கும் நிதியின் மூலம்தேவையான உதவிகளை தாயக உறவுகளுக்கு வழங்கும் நடவடிக்கையையும் செய்துவருகின்றது.
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் வெளிப்படையான கட்டமைப்பாகவும், பிரான்ஸ்அரசின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப செயற்படும் நிறுவனமாகவும், நிதி மற்றும் நிர்வாகவிடயங்களில் பொறுப்புவாய்ந்த நிறுவனமாகவும், தமிழ்மக்களின் நலன்களிற்கும் - ஒற்றுமைக்கும் உதவிடும் நிறுவனமாகவும் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ்தொடர்ந்தும் செயற்படு வருகின்றது.
இவ் ஆண்டும் தமிழ் மக்களின் நலனுக்காக செயற்படும் அனைத்து அமைப்புக்களின்ஆதரவோடு நடாத்தவுள்ளது
காலை 10.00 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகி தமிழர் பண்பாட்டு தவில்நாதஸ்வர இசை முளங்க, தமிழ் இனிய நடனத்துடன் சிறப்பு விருந்தினர்கள் அழைப்புஇடம்பெற்று கொடியேற்றலுடன் விளையாட்டுக்கள் ஆரம்பமாகும்
அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்
நன்றி
ஓன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் – பிரான்ஸ்
தமிழர் விளையாட்டுவிழா ஏற்பாட்டுக்குழு , தமிழர் புனர்வாழ்வுக்கழகம்
தொடர்புகட்கு: 01 40 38 30 74
சோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ரானீபாரி கிராமத்தை சேர்ந்த 60 வயதுடைய ஷங்கர் என்ற கணவர் தனது இறந்த 50 வயது மனைவியான சுசீலா தேவியின் சடலத்தை தனது 32 வயது மகனான பப்புவின் உதவியுடன் இவ்வாறு மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றுள்ளார்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
தந்தையும் மகனும் பஞ்சாப் மாநிலத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், சுசீலாவுக்கு திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தந்தையும் மகனும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.
பின்னர், சுசீலா மருத்துவமனையில் சேர்க்கப்பட சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பின்னர், சுசீலாவின் சடலத்தை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல இலவசமாக வகன வசதி ஏற்பாடு செய்து தருமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் கணவனான ஷங்கர் ஷா கேட்டுள்ளார்.
அதற்கு, வாகன வசதி இல்லையென கூறிய வைத்தியசாலை நிர்வாகம் சொந்த பணத்தை செலவழித்து தனியார் வாகனத்தை வடகைக்கு அமர்த்தி சடலத்தை கொண்டு செல்லும் படி வலியுறுத்தியுள்ளது.
வெளியே வந்து விசாரித்த போது தனியார் வானத்திற்கு 2,500 ரூபா கட்டணம் கேட்டுள்ளனர். அந்த அளவுக்கு பண வசதி இல்லாததால் மனைவியின் சடலத்தை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றுள்ளார் ஷங்கர் ஷா.
மகன் பப்பு மோட்டார் சைக்கிளைசெலுத்த, மனைவியின் சடலத்தை பின்னால் ஷங்கர் பிடித்து கொண்டுள்ளார்.
குறித்த செயலை வீதியிசென்றவர்கள் அவதானித்த நிலையில் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை எழுப்பியுள்ளது.சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தென்இலங்கை குடி நீர் கொள்ளையர்கள் யாழில் நயப்புடைப்பு
“அக்குவா சேவ்” என்ற பெயரில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனத்தைச் சார்ந்தவர்கள். தமது தண்ணீரை யாழ்.மாவட்டம் முழுவதற்கும் விநியோகம் செய்வதற்கான உரிமத்தை வழங்குவதாகக் கூறி யாழ்.மாவட்டத்தில் சுமார் 30 பேருக்கு மேற்பட்டவர்களிடம் பணத்தை பெற்றுள்ளனர்.
அவ்வாறு பணம் வழங்கிய பலருக்கு தண்ணீர் வழங்கப்படாததுடன் சிலருக்கு வழங்கப்பட்ட தண்ணீர் சுகாதார நியமங்களுக்கு அமைவாக இல்லை எனக்கூறி நுகர்வோர் அதிகாரசபையினால் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த நிறுவனத்துடன் தொடர்பு கொண்டபோது பலர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பணத்தை இழந்த பலர் அமைதியாக இருந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அண்மையில் ஒன்று கூடி எடுக்கப்பட்ட தீர்மானித்திற்கு அமைவாக மேற்படி தண்ணீர் தயாரிப்பு நிறுவத்தை சேர்ந்தவர்களை யாழ்.நல்லூர் சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்து ஒருவருக்கு புதிதாக வியோகஸ்த்தர் உரிமம் பெறுவது போல் பாவனை செய்து மேற்படி நிறுவனத்தின் முக்கியஸ்த்தர்கள் இருவரை பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
நேற்று மாலை 7 மணிக்கு குறித்த நிறுவனத்தை சார்ந்தவர்களை மடக்கிப் பிடித்த பாதிக்கப்பட்டவர்கள் அவர்களை நையப்புடைத்ததன் பின்னர் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் 2011 ஆம் ஆண்டு தொடக்கம் மேற்படி தண்ணீர் தயாரிப்பு நிறுவனம் இவ்வாறு விநியோகஸ்தர் உரிமம் வழங்குவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் பணம் செலுத்தியமைக்கான சான்றுகள் மற்றும் வழங்கப்பட்ட தண்ணீர் விற்பனைக்கு தடை செய்யப்பட்டமைக்கான சான்றுகள் அனைத்தையும் வைத்திருக்கின்றனர். அதேபோல் யாழ்.மாவட்டத்தில் மட்டும் அண்ணளவாக சுமார் 3 தொடக்கம் 4 கோடி ரூபா பணத்தை மேற்படி தண்ணீர் நிறுவனம் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது தொடர்பில் யாழ் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ள நிலையில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முகமாலை தாக்குதல் முன்னாள் போராளி கைதின் பின் விடுதலை
கடந்த மாதம் கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை கச்சார் வெளிப் பகுதியில் ரோந்து செல்லும் பொலிஸாரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது. நள்ளிரவு 12.31 மணியளவில் இடம்பெற்ற இத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொலிஸார் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
பொலிஸாரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இத் துப்பாக்கி சூட்டு சம்பவத்தினால் பொலிஸார் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில் அருகில் இருந்த ரயில்வே சமிக்ஞ்ஞை செயற்பாட்டு அறையின் கதவுகள் சேதமடைந்தது.
இச் சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதியில் அதிகளவான பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளினூடாக நேற்றுமுன்தினம் இரவு முன்னாள் விடுதலை புலி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் உரும்பிராய் ஞான வைரவர் கோவிலடியை சேர்ந்த கிருபானந்தன் கணேசன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு இவரது வீட்டிற்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் இவரை கைது செய்துள்ளார்கள். குறித்த நபர் வவுனியாவை சொந்த இடமாக கொண்டிருந்ததாகவும், யாழ்.உரும்பிராயில் தற்காலிகமாகவே வசித்து வந்ததாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
மேலும் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் கொழும்பு நீதிமன்றில் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் முற்படுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு
அனேகமாக நாளை செவ்வாய்க் கிழமை நடைபெற இருக்கும் வடக்கு மாகாண சபை அமர்வில் இந்த அறிக்கை முன்வைக்கப்படவுள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதிகளான எஸ்.தியாகேந்திரன், எஸ்.பரமராஜா மற்றும் ஓய்வு பெற்ற மாவட்டச் செயலர் செ.பத்மநாதன் ஆகியோர் அந்த விசாரணைக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்தக் குழு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது பணியை ஆரம்பித்தது. அதன் இறுதி அறிக்கை கடந்த மே மாதம் 19ஆம் திகதி முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
விசாரணை அறிக்கை 82 பக்கங்களைக் கொண்டுள்ளது. முழுமையாகத் தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவிற்கு வழங்கப்பட்ட ஆணை, விதிமுறை, அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள், கண்டறிவுகள், பரிந்துரைகள் அல்லது விதப்புரைகள், நன்றியுரை என்ற கட்டமைப்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உளவுப்பிரிவின் மடிக்கணனி திருட்டு
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளின்டன் தொடர்பாக முக்கிய தகவல்களை கொண்ட அமெரிக்க உளவுப் பிரிவின் மடிக்கணினி (லேப்டாப்)திருடப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
டிரம்ப் டவர் மற்றும் கிளின்டன் தனது சொந்த ஈமெயில் சர்வரை பயன்படுத்தியது தொடர்பாக புலனாய்வு செய்ததது தொடர்பான தகவல்கள் அந்த கணினியில் உள்ளதாக கூறப்படுகிறது.
வியாழனன்று நியூயார்க்கின் ப்ரூக்ளின் மாவட்டத்தில் ஒரு முகவரின் காரில் இருந்து அது எடுக்கப்பட்டது என அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.
சிசிடிவி பதிவை கொண்டு திருடியவர்களை அடையாளம் காண காவல் துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.
பாதுகாப்பு அமைப்பால் வழங்கப்பட்ட எல்லா கணினிகளும் பல அடுக்கு பாதுகாப்புகளை கொண்டதாக இருக்கும் என்றும் அவற்றில் ரகசிய தகவல்களை வைத்திருக்க அனுமதிக்கப்படமாட்டாது என்றும் ரகசிய சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி
சனிக்கிழமையன்று அதிகாலை மூன்று முப்பது மணியளவில் எம்.ஆர்.சி. நகரில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து போரூரை நோக்கிச் செல்லும்போது சாந்தோமுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் அவர்கள் சென்ற பிஎம்டபிள்யூ கார் மோதியது. இதில் கார் உடனடியாகத் தீப்பிடித்தது.
காரிலிருந்து அவர்களால் இறங்க முடியாத நிலையில், இருவரும் உடல் கருகி பலியாகினர்.
தீயணைப்புப் படையினர் தீயை அணைத்து இருவரது உடல்களையும் மீட்டனர்.
கார் அதிவேகத்தில் ஓட்டப்பட்டது இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
27 வயதாகும் அஸ்வின் சுந்தர் தேசிய கார் பந்தையங்களில் சாம்பியன் பட்டங்களை வென்றவர் என்பதோடு, இருசக்கர வாகன போட்டிகளிலும் கலந்துகொண்டிருக்கிறார்.
2008ஆம் ஆண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த மா கோன் மோட்டர்ஸ்போர்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ஜெர்மன் ஃபார்முலா ஃபோக்ஸ்வாகென் ஏடிஏசி சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார் அஸ்வின்.
அவரது மனைவி நிவேதிதா சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்துவந்தார்.
இலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில் மாற்றம் இல்லை
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையிலிருந்து வர்த்தக நடவடிக்கைகளுக்காகவோ அல்லது சுற்றுலா பயணிகளாகவோ கனடாவுக்கு செல்லும் இலங்கையர்கள் தொடர்ந்தும் விசா அனுமதியைப் பெற வேண்டியது அவசியம். சட்டரீதியான விசா அனுமதியை பெற்ற நபர்களுக்கே கனடா நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான அனுமதி வழங்கப்படும்.
மேலும் இலங்கையிலிருந்து கனடாவுக்கு செல்லும் இலங்கையர்கள் குறித்த நாட்டில் 90 நாட்கள் வரையில் விசா இன்றி சுற்றுலா அடிப்படையில் பிரவேசிக்க முடியும் என வெளியாகியிருந்த தகவல்கள் அடிப்படையற்றவையாகும். நாட்டுக்கு வரும் சகலரும் சட்டரீதியான விசா அனுமதியை பெற்ற பின்னரே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவர். இலங்கையர்களுக்காக தமது நாட்டின் வீசா கொள்கையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை.
கனடாவுக்கு வருவதற்கு முன்னர் தமது நாட்டின் விசா குறித்த தெளிவுப்படுத்தல்களை பெற்றுக்கொள் ளுமாறு கனேடிய அரசாங்கம் கோரிக்கை விடுக்கின்றது.
 
			 
                     
                     
                     
                     
                     
                     
                    
 
                                 
                                 
                                 
                                