Super User

Super User

தென் தமிழீழத்தச் சேர்ந்தவர் அவுஸ்ரேலியாவில் உயிரிழப்பு

தென் த‌மிழீழம் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பெண் பிள்ளைகளின் தந்தை தங்கராசா - வசந்தகுமார் (வயது48) அவுஸ்திரேலியாவில் உயிரிழந்ததாக மட்டக்களப்பிலுள்ள அவரது மனைவிக்கு உயவினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் NO;152 Rock State, bathurst, new South wel 2795 என்ற முகவரியில் வசித்து வந்த தனது கணவர் இறந்து விட்டதாக ஒக்டோபர் 28 அதிகாலை அவுஸ்திரேலியாவில் உள்ள உறவினர் ஒருவரின் தொலைபேசியூடாக தகவல் கிடைத்ததாக வாழைச்சேனை கிண்ணையடியை சேர்ந்த உயிரிழந்தவரின் மனைவி ரஞ்சிதமலர் தெரிவித்தார்.


அவுஸ்திரேலியாவில் தனது ஒரு மகளும் கணவரும் வசித்து வந்ததாகவும், நான்கு மகள்களுடன் தான் வாழைச்சேனை கிண்ணையடியில் வசித்து வரும் நிலையில் தனது கணவர் உயிரிழந்த தகவல் அதிர்ச்சியை தருவதாகவும் அவர் கவலையுடன் தெரிவித்தார்.
 ஐந்து பெண் பிள்ளைகளின் தந்தை தங்கராசா - வசந்தகுமார் (வயது48) அவுஸ்திரேலியாவில் உயிரிழந்ததாக மட்டக்களப்பிலுள்ள அவரது மனைவிக்கு உயவினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்மாரை கெளரவப்படுத்திய டோனியும் கோலியும்

நியுஸிலாந்து அணிக்கெதிரான 5 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் 190 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.

இந்த போட்டியில் சுவாரஷ்யமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

டோனி மற்றும் கோஹ்லி தங்களது அணி ஜேர்சியில் பெயர்களை மாற்றியவாறு போட்டியில் பங்குகொண்டனர்.

இந்த போட்டியில் டோனியின் ஜேர்சியில் “தேவகி” எனவும்,கோஹ்லியின் ஜேர்சியில் “சரோஜ்” எனவும் பெயரிடப்பட்டிருந்தது.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது தங்களது தாயாரின் பெயர்களை ஜேர்சியில் அச்சிட்டவாறு நேற்று போட்டியில் கலந்துக்கொண்டுள்ளனர்.

வன்னியில் இருந்து கடத்தப்படும் மரக்குற்றிகள்

வன்னிப்பிரதேசத்தில் இருந்து களவாக தென் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டுக்கொண்டிருந்த ஒருதொகை பெறுமதிமிக்க மரக்குற்றிகள் கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மரக்குற்றிகளை வன்னேரிக்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்று கொண்டு செல்லப்பட்ட வேளையிலேயே அவை பொலிஸாரினால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மரக்குற்றிகளை ஏற்றிசென்ற பார ஊர்தி பொலிஸாரால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

விசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

தமிழ் இணையத் தளம் ஒன்றிற்கு தடை

“வடக்கில் நீதித்துறையின் முடிவுகள் குறித்து பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு வருவதாகவும், நீதிபதிகள், சட்டவாளர்கள் குறித்து அவதூறான செய்திகளை வெளியிடுவதாகவும், வடக்கில் பொதுமக்களைத் தூண்டி விடும் வகையில் செயற்படுவதாகவும், இந்த இணையத்தளம் மீது முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட இணையத்தளம் சிறிலங்கா ரெலிகொம் இணைய வழங்கி சேவையைப் பயன்படுத்தி வந்துள்ளது.

முறைப்பாடுகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஊடக அமைச்சு ஆகியன மேற்கொள்ளும் விசாரணைகள் முடியும் வரை குறித்த இணையத்தளம். தடைசெய்யப்பட்டுள்ளது. ” என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் தடை செய்யப்பட்ட முதலாவது இணையத்தளம் இது என்பது குறிப்பிட த்த க்கது.

டொனால்ட் ட்ரும்பிற்கு சார்பானவரா F.B.I இயக்குனர்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு குறைவாக இருக்கும் தற்போது, இந்த புதிய மின்னஞ்சல்களின் இருப்பு குறித்து வெளிப்படுத்த எஃப்.பி.ஐ அமைப்பின் இயக்குனரான ஜேம்ஸ் கோமி முடிவெடுத்தது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர்கள் வாதிட்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து மீண்டும் விசாரிக்க எஃப்.பி.ஐ முடிவு எடுத்தது முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்ளதாகவும், ஆழ்ந்த கவலையளிப்பதாகவும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
எஃப்.பி.ஐ-யின் இந்த முடிவு குறித்து அதன் இயக்குனர் ஜேம்ஸ் கோமியிடம் அமெரிக்க நீதி துறை அதிகாரிகள் எச்சரித்தாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பாதுகாப்பாக பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த மூன்று விண்வெளி வீரர்கள் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளனர்.

விண்வெளியில் 4 மாதங்கள் தங்கியிருந்த இவர்கள் மூவரும் தற்போது கசக்ஸ்தானை அடைந்துள்ளனர்.
எதிர்காலத்தில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படவுள்ள விண்வெளி வாகனங்களுக்கு ஒரு தளத்தை நிறுவுதல் மற்றும் விண்வெளியில் டிஎன்ஏ மரபணு வரிசைமுறையை முதல் முறையாக பயன்படுத்துவது ஆகியவை இந்த விண்வெளி வீரர்களின் பணிகளில் உள்ளடங்கும்.

விண்வெளியில் இருந்த காலத்தில் தான் பணிச்சுமையுடன் மிகவும் பரபரப்பாக இருந்ததாகவும், இக்காலகட்டத்தில் பூமியில் என்ன நடந்தது என்பது தனக்கு தெரியாது என்று கூறிய இந்த விண்வெளி வீரர்களின் தலைவரான ரஷ்யாவின் அனாடோலி இவானிஷின், இக்காலகட்டத்தில் பூமியில் நடந்த நிகழ்வுகள் நல்லதாகவே நடந்திருக்கக் கூடும் என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

விமானத்தில் தீ, பயணிகள் உயிர்தப்பினர்

சிக்காக்கோ விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட விமானம் ஒன்று தீப்பாற்றியுள்ளது.அமெரிக்க விமான சேவைக்கு சொந்தமான விமானமே தரையிறக்கும் போது தீப்பிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

இச் சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 7 பயணிகள் மற்றும் விமான சிப்பந்தியொருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜீ லம்ப்பார்ட் குழு கொழும்பு விஜயம்: ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீளாய்வு

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் தென்னாசிய நாடுகளுக்கான தொடர்பாளர் ஜீன் லெம்பர்ட் தலைமையிலான குழுவொன்று நாளை கொழும்பு வருகின்றது. இந்தக்குழ்வினர் மூன்று நாட்கள் இலங்கையில் தங்கி இருந்து ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீள வழங்குவது தொடர்பான சாத்தியக்கூறுகளை அவதானிப்பர்..

அத்துடன் இந்தக் குழுவினர் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளுக்கும் விஜயம் செய்ய விருப்பதோடு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்து ரையாடுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்னேஸ்வரன் அரசியக் சட்டத்தை மீறியுள்ளாராம்

முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரன் இலண்டனுக்கு சென்றமை தொடர்பில் அரசியல் சட்டத்தை மீறியுள்ளதாக சிங்கள அரசு கூறியுள்ளது.

இதேபோன்று, தற்பொழுது பதில் முதலமைச்சராக கடமையாற்றுபவரும் வடக்கு ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவில்லையெனவும் ஆளுனர் செயலகம் கூறுகின்றது.

வட மாகாண முதலமைச்சர் கடந்த 14 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதியான இன்று வரை வெளிநாட்டுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். இவரது விஜயம் முடியும் வரை பதில் முதலமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாதுள்ளதனால், கடந்த 15 ஆம் திகதி கூடிய வட மாகாண சபைக் கூட்டத்தின் போது சபைத் தலைவர் சி.வி.கே. சிவஞானமினால், கல்வி அமைச்சர் ரி. குருகுலராஜா பதில் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள இவர், இதுவரை வட மாகாண ஆளுநர் முன்னிலையில் பதில் முதலமைச்சராக பொறுப்புக்களைப் பாரமெடுக்காதுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அரசியலமைப்பின் 154 ஆம் உறுப்புரையில், முதலமைச்சர் ஒருவர் வெளிநாடு செல்வதாயின், ஆளுநரின் அனுமதியைப் பெற்று, பதில் ஒருவரை நியமித்து விட்டு, அவ்வாறு நியமிக்கப்பட்டதனை வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தான் வெளிநாடு செல்ல முடியும். இருப்பினும், இந்த நடைமுறைகளை வடக்கு முதலமைச்சர் மீறியுள்ளதாக ஆளுனர் செயலகம் கூறியுள்ளது.

ரணில்-மைத்திரி ஆகியோரின் ஊழல் அம்பலம்

கோப் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய வங்கியின் பிணை,முறி மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அதற்குத் துணைசென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் நாட்டு மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும் என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.


ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

“முதலில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் நியமனமானது அரசியல் யாப்பு சபையின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டது. அவர் முறையாக பதவி யேற்கவில்லை. இது நடைமுறை யாப்பிற்கு எதிரானது. இது திட்டமிடப்பட்ட ஒரு கொள்ளைச் சம்பவம். இதில் சந்தேகம் இல்லை. இது தவறுதலாகவோ தெரியாமலோ நடந்த விடயமல்ல.

ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதி பதவியேற்கின்றார், 9ஆம் திகதி பிரதமர் பதவியேற்கின்றார். ஒருசில தினங்களில் மத்திய வங்கி பிரதமரின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. இந்த நாட்டின் பிரஜையல்லாதவர் ஆளுநராக பதவியேற்கின்றார். நல்லாட்சி அரசாங்கம் தற்போது நான்முனை சந்தியில் ஆடையின்றி நிற்கின்றது. நல்லாட்சி லேபலை ஒட்டிக்கொண்டுதான் ஊழலில் ஈடுபட்டனர். கடந்த 40 வருட அரசியல் வாழ்வில் இரண்டு விடயங்கள ஊடாகவே பயணிக்கின்றார்.

ஒன்று பொருளாதாரத்தை மிகவிரைவாக அபிவிருத்தி செய்வதாக கூறுவார். மூன்று முறை பிரதமரானார் என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியும். இரண்டாவது காரணம் கொலைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் அவர் மீது இருந்தது. எனினும் அவர் ஒரு நாளும் ஊழலில் ஈடுபடமாட்டார் என நீங்கள் தெரிவிக்கலாம். எனினும் இந்த மிகப்பெரிய கொள்ளையுடன் மக்கள் ஒரு தீர்மானத்திற்கு வர முடியும். இது தவறுதலாக நடந்த விடயமல்ல. நாங்கள் கொள்ளையர்கள் என தொடர்ச்சியாக கூறி வருகின்றார்.

எனினும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. எனினும் அவருடன் இணைந்திருக்கும் அர்ஜுன மகேந்திரன் கொள்ளையில் ஈடுபட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. ஆகவே இது தொடர்பில் மேலும் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய கொள்ளையே இது” - என்றார்.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…