உலகம்
ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து பிரிடன் விலகுவது தாமதமாகும்
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் பிரிவது நீதிமன்ற முடிவால் தாமதமாகும் என அறியமுடிகின்றது.முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளைத் துவக்குதவற்கு, அதற்கான விதிமுறைகளின் பிரிவைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பிரிட்டன் அரசாங்கத்தின் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.அரச சிறப்பு அதிகாரம் என்ற பெயரில், நாடாளுமன்றத்தைத் தவிர்த்துவிட்டு அரசாங்கம் செயல்பட முடியாது என்று, பிரசாரகர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக…
சீன நாட்டில் காவல்துறையின் வித்தியாசமான தண்டனை
தெற்கு சீனாவில் வாகன முகப்பு விளக்குகளை அதிகமாக பிரகாசிக்கவிட்டு சென்றால் ஒரு நிமிடத்திற்கு அதே போன்ற பிரகாசமான விளக்குகளை ஓடுனர்கள் உற்றுப் பார்க்க வேண்டும். இப்படி ஒரி வித்தியாசமான தண்டனையை வழங்கி வருகின்றனர் சீன காவல்துறையினர்.ஷென்ஸென் நகர போக்குவரத்து காவலர்கள் தங்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள கணக்கில் தங்களுடைய பிரசார நடவடிக்கையின் புகைப்படங்களை பதிந்துள்ளனர். ''நீண்ட தூரம் ஒளிக்கதிரை உமிழும் விளக்குகளை கொண்டு இன்று இரவு நாங்கள் தண்டனைகள் வழங்க உள்ளோம்'' என்ற அவர்களுடைய பதிவு, 87 ஆயிரம் விருப்பங்களை ( லைக்ஸ்) பெற்றுள்ளது.…
டொனால்ட் ட்ரம்ப் உலகிற்கே ஆபத்தானவர்
அமெரிக்காவிற்கும், உலகிற்கும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு அச்சுறுத்தல் என்று அதிபர் ஒபாமா, தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்துள்ளார்.இந்த நாட்டிற்கும், உலகிற்கும் ட்ரம்ப் ஒரு அச்சுறுத்தல்: அதிபர் ஒபாமாஆதரவு ஊசலாடும் மாநிலம் என்று கருதப்படும் மாநிலங்களில் ஒன்றான, வட கரோலினாவில் மாகாணத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அதிபர் ஒபாமா, அடுத்த அமெரிக்க அதிபராக ஹிலரி தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், கடந்த எட்டு ஆண்டுகளில் தான் அதிபராக இருந்த போது அடைந்த முன்னேற்றங்கள் அனைத்தும் பின் தள்ளப்படும் என்றார்.சிறுபான்மை குழுக்களின் சிவில் உரிமைகளை…
டொனால்ட் ட்ரும்பிற்கு சார்பானவரா F.B.I இயக்குனர்
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு குறைவாக இருக்கும் தற்போது, இந்த புதிய மின்னஞ்சல்களின் இருப்பு குறித்து வெளிப்படுத்த எஃப்.பி.ஐ அமைப்பின் இயக்குனரான ஜேம்ஸ் கோமி முடிவெடுத்தது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர்கள் வாதிட்டுள்ளனர்.இந்த விவகாரம் குறித்து மீண்டும் விசாரிக்க எஃப்.பி.ஐ முடிவு எடுத்தது முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்ளதாகவும், ஆழ்ந்த கவலையளிப்பதாகவும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.எஃப்.பி.ஐ-யின் இந்த முடிவு குறித்து அதன் இயக்குனர் ஜேம்ஸ் கோமியிடம் அமெரிக்க நீதி துறை அதிகாரிகள்…
விமானத்தில் தீ, பயணிகள் உயிர்தப்பினர்
சிக்காக்கோ விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட விமானம் ஒன்று தீப்பாற்றியுள்ளது.அமெரிக்க விமான சேவைக்கு சொந்தமான விமானமே தரையிறக்கும் போது தீப்பிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.இச் சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 7 பயணிகள் மற்றும் விமான சிப்பந்தியொருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுவிற்சர்லாந்தில் குழுமோதல் தமிழர் பலி
சுவிட்ஸர்லாந்தில் இரு தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம், நேற்று முன்தினம் அந்நாட்டின் சொலத்தூண் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.சுவிஸ்வாழ் இலங்கை தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்தர்க்கம் முற்றிய நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தமிழர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழ ந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த 29 வயதான கார்த்திக் பாலேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக சுவிட்ஸர்லாந்து பத்திரிகைகள்…