தமிழகம்
தமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை
          ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் அமைதியான முறையில் ஒரு வார காலமாக அறவழிப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது இனிமேல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களைக் குடிக்க மாட்டேன் என்று இளைஞர்கள் அறிவித்தனர். இளைஞர்களின் இந்த முடிவு சமூக வலைதளங்களின் மூலம் தீயாக பரவியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கடைகள், திரையரங்குகள் ஆகியவற்றில் இனிமேல் பெப்சி, கோக் விளம்பரம் செய்யப்பட மாட்டாது என அறிவித்தன.இந்நிலையில் இதுதொடர்பாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா இன்று விழுப்புரத்தில்…      
        நான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்
          தேச விரோத சக்திகள் போராட்ட களத்தில் புகுந்துவிட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி, மாணவர்கள் சென்னை மெரினாவில் நடத்திய அறவழி போராட்டம் நேற்றுடன் முடிவிக்கு வந்தது. முன்னதாக போலீஸ் திடீரென நடத்திய தடியடியால் தமிழகமே போர்க்களமானது.இப்படி தடியடி நடத்த காரணமே, மாணவர்கள் போராட்டத்திற்கு உள்ளே தேச விரோத சக்திகள் புகுந்து அவர்களை திசை மாற்ற முற்பட்டதுதான் என்று காவல்துறையும், அரசும் தெரிவித்துள்ளது (சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்றில், அரசு வக்கீலும் இதையே குறிப்பிட்டார்). இந்நிலையில், இன்று சென்னையில்…      
        பொலிசாரே வன்முறையினை ஆரம்பித்தார்களா ?கமல் அதிர்ச்சி
          சென்னையில் போலீசார் கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் நடிகர் கமல்ஹாசன். அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டும் விலங்கு வதை நடப்பதாக கூறி அதை எதிர்ப்பது தவறு. யானைகளுக்கு சங்கிலி போட்டு கட்டி வைப்பதும் கொடுமைதான். பட்டாசு வெடிப்பதால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதும் உண்மைதான். அதை நாம் பாரம்பரியம் என்ற பெயரில் அனுமதிக்கும்போது ஜல்லிக்கட்டையும் அனுமதிக்கலாம். ஆண்டு முழுக்க காளைகளை அதனை வளர்ப்போர் அக்கறையாகத்தான் பார்த்துக்கொள்கிறார்கள்.ஜல்லிக்கட்டு விஷயத்தில் மட்டுமே இரட்டை நிலைப்பாட்டை எடுப்பவர்களைதான்…      
        அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது, நாளை சல்லிக்கட்டு
          அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய தமிழகத்தின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு களங்கள் நாளை திறக்கப்பட்டு வாலை முறுக்கியபடி காளைகள் நாளை சீறிப்பாய உள்ளன. அதை மீசை முறுக்கிய தமிழ் காளைகள் பாய்ந்து அடக்க உள்ளனர். உலகமே தமிழர்கள் ஒற்றுமையையும், போராட்ட குணத்தையும் பார்த்து வியக்கும்.ஆம்.. ஆளுநர் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த கையோடு, மேற்கண்ட மூன்று ஜல்லிக்கட்டு களங்களிலும் உள்ளாட்சி ஊழியர்கள் தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்தும் வேலையை தொடங்கியுள்ளனர். மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ் நேரில் ஆய்வு செய்தார். முதல்வர் பன்னீர்செல்வம் இன்று இரவு மதுரை…      
        ஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும்
          ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அவசர சட்டம் கொண்டுவந்துள்ள நிலையில் அதற்கு தடை கோருவது எப்படி என்பது குறித்து பீட்டா அமைப்பு நிர்வாகிகள் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக தமிழக அரசு உருவாக்கியுள்ள அவசர சட்ட வரைவுக்கு, மத்திய சட்டம், கலாசாரம், வனத்துறை அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளன.குடியரசு தலைவர் நாளேயே சட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பீட்டா அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் பூர்வா ஜோஷிபூரா, அளித்த பேட்டியில் "ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக…      
        அவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை
          2011ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் தடுப்பு பட்டியலில், காளைகளை அப்போதைய, மத்திய சுற்றுசூழல் மற்றும வனத்துறை அமைச்சகம் சேர்த்தது. இதனால், ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதன்பிறகு விலங்குகள் தடுப்பு பட்டியலில் இருந்து காளைகளை நீக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை. இந்நிலையில், தற்போது மாநில அரசு ஒரு அவசர சட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வழியாக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளது.இந்த சட்டத்திற்கு அனேகமாக அனுமதி கிடைத்துவிடும் என்பது மத்திய அரசின் சமிக்ஞை உணர்த்துகிறது. ஆனால் இது…      
         
			 
             
             
             
             
             
            
 
                                 
                                 
                                 
                                