அவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம்

யாழில் இதுவரை ஆவா குழுவைச் செர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஆவா குழுவில் 62 பேர் உள்ளடங்குவதாக சட்டம், ஒழுங்கு அதிகாரிகள் இனங்கண்டுள்ளனர் என்றும் சிங்கள அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
இருப்பினும்,தற்போது 8 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த அமைச்சரான சாகல ரத்நாய க்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,ஆவா குழு தொடர்பில் விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேற்கண்ட வாறு கூறியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மையில் இடம் பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் ஆவா குழுவுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆவா குழுவை உருவாக்கியவர்களே கட்டுப்படுத்த கோரும் அதிசயம்

வட தமிழீழத்தில் சிங்கள புலனாய்வாளர்களால் உருவாக்கப்பட்ட “ஆவா” குழுவினால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உத்தியோகப்பற்றற்ற ரீதியில் இந்த வேண்டுகோளை இராணுவம் விடுத்துள்ளது. அவசரகால நிலைமை அமுலில் இல்லாததனால் சிவில் நிலைமையில் தலையீடு செய்ய முடியாதுள்ளதாகவும் இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கில் பாதுகாப்பற்ற ஒரு நிலைமை உருவாகி வருவது ஆபத்தானது என புலனாய்வுத்துறை அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்டி யுள்ளது.

தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையினை குளப்பும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த ஆவா குழுவினை உருவாக்கியவர்களே கட்டுப்படுத்த அனுமதி கோருவது தமிழ் மக்கள்:ஐ முட்டாள்களாக்கும் செயலே தவிர வேறொன்றும் இல்லை.

சுன்னாகத்தில் காவல்துறை மீது வாள்வெட்டு

பிரதேசத்தில் கடமையில் இருந்த இரண்டு காவல்துறையினர் மீது இன்று (23/10/2016) பிற்பகலில் நடந்த வாள் வெட்டு தாக்குதலில், அவர்கள் காயமடைந்திருப்பதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
சுன்னாகத்தில் வர்த்தக நிலையம் ஒன்றின் எதிரில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதில் காவல்துறையைச் சேர்ந்த நிமல் பண்டார, பி.எஸ்.நவரட்ன ஆகியோர் காயமடைந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆறு பேர் கொண்ட குழுவொன்று காவல்துறையினர் மீதான இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகின்றது.

வாள்வெட்டு நடத்தியவர்களைக் கண்டுபிடிப்பதற்காக அங்கு பெருமளவில் அதிரடி காவல்துறையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

பெருமளவில் குவிக்கப்பட்ட அதிரடி காவல்துறையினர்
இந்தச் சம்பவம் யாழ் பிரதேசத்தில் மக்கள் மத்தியில் பற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாள்வெட்டுக் குழுவினரின் அட்டகாசம் யாழ் மாவட்டத்தில் அதகரித்திருப்பதையடுத்து, அதனைக் கட்டுப்படுத்துவதற்காக களத்தில் இறக்கப்பட்டிருந்த விசேட காவல்துறை அணியொன்று யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திப்பகுதியில், வியாழக்கிழமை இரவு கடமையில் இருந்தபோது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து யாழ் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலையைத் தொடர்ந்து காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டிருந்த சூழலிலேயே இந்த வாள்வெட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
குளப்பிட்டிச் சந்தி சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவராகிய பவுண்ராஜ் எனப்படும் விஜயகுமார் சுலக்சன் என்ற மாணவன் சுன்னாகம் கந்தரோடையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய இறுதிக்கிரியைகள் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவனாகிய நடராஜா கஜனின் இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றுள்ளது. பெருந்திரளான மக்கள் இந்த இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டிருந்தனர்.

கிளிநொச்சி கிளாலி பகுதி குண்டு வெடிப்பில் ஒருவர் மரணம்
இதற்கிடையில் கிளிநொச்சி மாவட்டம் பளை பிரதேசத்தில் கிளாலி என்ற இடத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பிரதேசத்திற்குள் சென்றபோது, குண்டொன்று வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றுமொருவர் காயமடைந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பளை ஆர்த்திநகரைச் சேர்ந்த 37 வயதுடைய கறுப்பையா ராஜா என்பவர் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

மாணவர்களின் இறுதி நிகழ்வு; அரசியல்வாதிகள் பேசத் தடை

சிங்கள காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் இறுதி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை அவரது கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று இரணைமடு பொது மயானத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

காலை பத்து மணிக்கு அவரது இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பல்கலைக்கழக மாணவா்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகா்கள் என பெரும் திரளானவா்கள் கலந்துகொள்ள இறுதி ஊா்வலம் இடம்பெ ற்றது.

நிகழ்வின் போது வடக்கு மாகாண கல்வி அமைச்சரும் பதில் முதலமைச்சருமான த.குருகுலராஜா இரங்கல் உரை யாற்றிக்கொண்டிருந்த போது தங்களது கடும் எதிா்ப்பினை தெரிவித்த பல்கலைக்கழக மாணவா்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒலி வாங்கிகளை கழற்றி எறிந்தனர்.. அத்தோடு ஊடகவியலாளா்களையும் வெளியேறுமாறும் அவா்கள் கூச்சலிட்டனா். இதனால் அங்கு சிறுது நேரம் அமைதியின்மை ஏற்ப்பட்டது.

மேலும் எந்த அரசியல்வாதிகளும் இங்கு உரையாற்றக் கூடாது என பல்கலைக்கழக மாணவா்கள் தெரிவித்த நிலையில் அங்கு வருகை தந்திருந்த பாராளுன்ற உறுப்பினா்கள், மாகாண சபை உறுப்பினா்கள் எவரையும் ஏற்பாட்டாளா்கள் பேசுவதற்கு அனும தியளிக்கவில்லை.

பின்னா் கிராம மட்ட அமைப்புகள், ஒரு சில மாணவா்களின் உரையுடன் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று நிறைவுற்றது.

யாழ் மாணவர்கள் கொலை- மைத்திரியின் விசேட குழு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த தகவலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (22) வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக்குழுவொன்றும் யாழிற்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிசாரின் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் பலி

கொக்குவிலில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ஐந்து பொலி சாரையும் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்

இது குறித்து மேலும் தெரியவருவதாவது கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கருகில் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்த பல்கலை க்கழக மாணவர்களின் பிரேத பரிசோதனையில் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் இறந்தார்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று மாலை இச் சம்பவம் தொடர்பாக 5 பொலிசாரை கைது செய்ததாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

அந்த ஐந்து பொலிசாரும் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன் போது ஐவரையும் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்ற நீதவான் சதீஸ்க ரன் உத்தரவிட்டுள்ளார்.அத்துடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து பொலிஸாரையும் யாழ்ப்பாண சிறைச்சாலை பாது காப்பற்றதென பொலிஸார் தெரிவித்தநிலையில் அவர்களை அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறும் எதிர்வரும் 24ஆம் திகதி மீளவும் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…