போர்க்குற்ற விசாரணை; வெளியார் தலையீட்டிற்கு தடை

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்கான நீதிப் பொறிமுறையில்,வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என, ஐ.நாவுக்கும், சக்திவாய்ந்த மேற்குலக நாடுகளின் தலை வர்களுக்கும் தாம் அறிவித்து விட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் நேற்று புதிய நீதிமன்றத் தொகுதியை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய பின்னர், உரையாற்றியபோதே ஜனாதி பதி இவ்வாறு குறிப்பிட்டார்.

“வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைப் பொறிமுறையில் உள்ளடக்க முடியாது என்ற தகவலை ஐ.நா பொதுச்செயலர் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மற்றும் சக்திவாய்ந்த மேற்குலக நாடுகளின் தலைவர்களுக்கும் தெரிவித்து விட்டேன்.

நாட்டின் சட்ட மற்றும் அரசியலமைப்பு வரையறைகளின்படி, எந்தவொரு வழக்கிலும் வெளிநாட்டு நீதிபதிகளை எமது நாட்டுக்கு கொண்டு வருவதற்கு இடமளிக்க முடியாது.

அவ்வாறு நாம், வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வருவதானால், நாட்டின் சட்டங்களையும், அரசியலமைப்பையும் மாற்ற வேண்டும்.

இலங்கையில் உள்ள நீதிபதிகள், கல்வி, மதிநுட்பம், ஆற்றல், அனுபவம் ஆகியவற்றில், உலகின் வேறெந்த நீதிபதிகளையும் விட இர ண்டாம் தரமானவர்கள் அல்ல. அவர்கள் எந்த உள்நாட்டு மற்றும் அனைத்துலக விவகாரங்களையும் கையாளக் கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.

எனவே இலங்கை தொடர்பான விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளின் சேவையை பெற வேண்டிய அவசியம் இல்லை.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மைத்திரி இந்தியாவுக்கு திடீர் விஜயம்

பிராந்திய அமைப்புகளின் ஒத்துழைப்பில் புதியதோர் தோற்றைத்தக் குறிக்கும் வகையில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாடு இந்தியாவில் இன்று ஆரம்பமாகவுள்ளது.இதில் பங்கேற்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்கின்றார்

8ஆவது தடவையாக நடைபெறும் இந்த பிரிக்ஸ் மாநாட்டின் தலைமைப் பொறுப்பும் உபசரிப்பு பொறுப்பும் இந்தியாவுக்கு கிடை த்துள்ளதுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாநா ட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்தியாவின் கோவாவில் இந்த மாநாடு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

இந்தியா. சீனா ரஷ்யா, பிரேசில், தென் ஆபிரிக்கா ஆகிய வளர்ச்சியடைந்து வரும் ஐம்பெரும் பொருளாதார நாடுகளும் பங்களா தேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும் ஆப்கானிஸ்தான் மாலைதீவு ஆகிய நாடுகளின் தலைவர்களும் இம்மாநாட்டில் பங்குபற்றுகின்றனர்.

இந்த மாநாட்டிற்கு இடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடவிருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மைத்திரியின் அறிக்கை-கோத்தா மகிழ்ச்சி

ஜனாதிபதி உண்மையை உணர்ந்து கொண்டமை குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். இதேபோன்று பல்வேறு நபர்களின் நிகழ்ச்சி நிரலின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், அவரது செயற்பாடுகளில் நேரடியாக செயற்படுவார் என நான் நினைக்கின்றேன் என நிதி குற்ற விசாரணை பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜப க்சதெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

நான் எந்தவொரு விசாரணைகளையும், புறக்கணிக்கவில்லை. பல்வேறு நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளும் இந்த விசாரணைகள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய மேற்கொ ள்ளப்படுகிறது என்பதை நாங்கள் கடந்த இரண்டு வருடங்களாக தெளிவாக சுட்டிக்காட்டி யுள்ளோம்.தற்போது ஜனாதிபதி அதே முறையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ராஜபக்க்ஷ குடும்பத்தினருக்கு இடையில் எது வித இரகசிய ஒப்பந்தங்களும் இல்லை

கடற்படை அதிகாரிகள் மூவரை நீதிமன்றத்திற்கு அழைத்தமை தொடர்பில் அதிருப்தி வெளி யிடுவதற்கு முன்னர் ஜனாதிபதி, தன்னுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளவில்லை என கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…