இலங்கை

வடமாகாணசபையினை சாடும் சுமந்திரன், இவர் எந்தக் கட்சி?

முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் அசமந்தப்போக்கை வேண்டும் என்றே வடக்கு மாகாண சபை கடைப்பிடிப்பதாக எம்.ஏ.சுமந்திரன்குற்றம் சாட்டியு ள்ளார்..வடமாகாண சபையின் இந்த நிலை மாறவேண்டும் என தெரிவித்துள்ள எம்.ஏ.சுமந்திரன் அது மாறாது இருக்குமானால் வடக்கில் தமிழ் மக்களின் மீள்குடியேற்றமும் ஒழுங்காக நடைபெறாது என்ற உண்மையை அவர்களும் உணரவேண்டும் எனவும் தெரிவித்து ள்ளார்.முஸ்லிம் சமூகத்திற்காக எப்படி உழைத்தாலும் அவர்கள் சுமந்திரனுக்கு வாக்கு போடமாட்டார்கள் அல்லது தமிழர்கள் தமது உரிமையினைப்பெற ஆதரவு கொடுக்கவும் மாட்டார்கள் என்பது சுமந்திரனுக்கும் தெரியும் முஸ்லிம்களுக்கும் தெரியும். போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மீழ்குடியேற்றங்களே…

தமிழ் இணையத் தளம் ஒன்றிற்கு தடை

“வடக்கில் நீதித்துறையின் முடிவுகள் குறித்து பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு வருவதாகவும், நீதிபதிகள், சட்டவாளர்கள் குறித்து அவதூறான செய்திகளை வெளியிடுவதாகவும், வடக்கில் பொதுமக்களைத் தூண்டி விடும் வகையில் செயற்படுவதாகவும், இந்த இணையத்தளம் மீது முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.குறிப்பிட்ட இணையத்தளம் சிறிலங்கா ரெலிகொம் இணைய வழங்கி சேவையைப் பயன்படுத்தி வந்துள்ளது.முறைப்பாடுகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஊடக அமைச்சு ஆகியன மேற்கொள்ளும் விசாரணைகள் முடியும் வரை குறித்த இணையத்தளம். தடைசெய்யப்பட்டுள்ளது. ” என்றும் அவர் தெரிவித்தார்.இலங்கையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் தடை செய்யப்பட்ட முதலாவது இணையத்தளம்…

ஜீ லம்ப்பார்ட் குழு கொழும்பு விஜயம்: ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீளாய்வு

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் தென்னாசிய நாடுகளுக்கான தொடர்பாளர் ஜீன் லெம்பர்ட் தலைமையிலான குழுவொன்று நாளை கொழும்பு வருகின்றது. இந்தக்குழ்வினர் மூன்று நாட்கள் இலங்கையில் தங்கி இருந்து ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீள வழங்குவது தொடர்பான சாத்தியக்கூறுகளை அவதானிப்பர்..அத்துடன் இந்தக் குழுவினர் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளுக்கும் விஜயம் செய்ய விருப்பதோடு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்து ரையாடுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரணில்-மைத்திரி ஆகியோரின் ஊழல் அம்பலம்

கோப் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய வங்கியின் பிணை,முறி மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அதற்குத் துணைசென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் நாட்டு மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும் என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.“முதலில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின்…

வடக்கில் ராணுவம், பொலிஸ் மேலும் குவிக்கப்படவேண்டும்- மஹிந்த‌

வட மாகாணத்தில் இராணுவ புலனாய்வு செயற்பாடுகளை அதிகரிக்க‌ வேண்டும் என போர்க்குற்றவாளி மஹிந்த‌ ராஜபக்ஷ தெரிவி த்துள்ளார்.காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே முன்னாள் ஜனாதி பதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அங்கு தொடர்ந்து தெரிவித்த மஹிந்த‌, ‘வடக்கில் அண்மையில் இடம்பெற்ற சம்பவமானது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறு த்தலை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாம் ஏற்கனவே பலமுறை சுட்டி க்காட்டி உள்ளோம். ஆனால் நமது கருத்துக்களை இந்த நல்லாட்சி அரசாங்கம் பொருட்படுத்தவில்லை.இந்நிலையில், அண்மையில் இடம்பெற்ற யாழ். சம்பவம் இதனை…

அர்ஜுனா மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேற்றம்

மத்திய வங்கியின் திறைசேரி பிணை முறி பத்திர முறைகேடு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அர்ஜுனா மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.12 மணியளவில் சிங்கப்பூர் செல்லும் ஈ.கே.348 விமா னத்தில் அவர் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை கோப் குழு தலைவரும் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி சமர்ப்பிக்கவுள்ள அறிக்கைக்கு மாற்றீடாக மற்றுமொரு அறிக்கையை சமர்ப்பிக்க ஐக்கிய தேசிய கட்சி முன்னர் திட்டமிட்டிருந்தது.எனினும் பிணை முறிப் பத்திர மோசடியில் இருந்து அர்ஜுன மகேந்திரனை பாதுகாக்கும் வகையிலேயே ஐக்கிய தேசிய கட்சி, வேறு…

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…