கேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையாக்கப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமென கோரி கடந்த 27 நாட்களாக வீதியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் 27ஆவது நாளான இன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் கேப்பாபுலவு மக்களின் போராட்டக்களத்துக்கு வருகைதந்து தமது ஆதரவினை வெளியிட்டிருந்ததோடு மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட உதவி பொருட்களையும் வழங்கி வைத்தனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் மற்றும் தலைவர் பிரியந்த பெர்ணாண்டோ உள்ளிட்ட அனுராதபுரம், கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய பிரதேங்களை சேர்ந்த சிங்கள தமிழ் முஸ்லீம் ஆசிரியர்கள் இன்று கேப்பாபுலவுக்கு வருகைதந்திருந்தனர்.

அத்தோடு இன்று கேப்பாபுலவு போராட்டக்களத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளையும் விசேட உளவள ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆசிரியர் சங்கத்தில் செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் கேப்பாபுலவு மக்களின் நியாயமான தமது சொந்த நிலங்களில் வாழ வேண்டும் என்ற கோரிக்கை தீர்த்து வைக்கப்படவேண்டியது.
இதுவரை நாள் இந்த மக்கள் வீதியில் கிடந்தது படும் அவலத்தை கண்டு கொள்ளாத நல்லாட்சி என சொல்லும் அரசு இவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இவர்கள் தமது சொந்த நிலங்களில் வாழ வழி செய்ய வேண்டுமென தெரிவித்தார்.

வவுனியா, நல்லூரில் உண்ணா விரத போராட்டம், தாய் மயங்கி வீழ்ந்தார்

வடக்கில் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தின்போது கடத்தப்பட்டு காணாமற் போன உறவுகள் தொடர்பில் அரசாங்கம் தீர்க்க மான பதிலைத் தரவேண்டுமென வலியுறுத்தி நல்லூர் ஆலய முன்றலில் இன்றைய தினம் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகி ன்றது.

குறித்த போராட்டமானது வடக்கில் காணாமற் போனோர் பாதுகாவலர் சங்கதினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் வடக்கில் யுத்த காலத்தில் காணாமற் போன நபர்களின் உறவுகளால் காலை 9 மணி முதல் மாலை 4 வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமலாக்கப்பட்ட ஒருவரின் தாயார் நேற்றுமாலை மயக்கமடை ந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 14 பேர் நேற்று மூன்றாவது நாளாகவும், வவுனியா அஞ்சலகத்துக்கு முன்பாக, உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்களில் சிலரின் உடல் நிலை மோசமடைந்திருப்பதாக, நேற்றுக்காலை பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர் தெரிவி த்திருந்தார்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாயார் ஒருவர் நேற்றுமாலை மயக்கமடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எமது நிலம் எமக்கே! கேப்பாபிலவு மக்கள் ஆர்ப்பாட்டம்

மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவுக்கு வருவதனை முன்னிட்டு கேப்பாப்புலவு மக்கள் அங்குள்ள பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை கொட்டும் மழைக்கு மத்தியிலும் முன்னெடுத்துள்ளனர்.

ஆனால் மைத்திரிபால முல்லைத்தீவுக்கு வரவில்லை என்றாலும் மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்து இருந்தனர்.

முல்லைத்தீவு, கேப்பாப்புலவுக்கு ஜனாதிபதி வருகை தரும் போது கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என இராணுவத்தினர் எச்சரித்துள்ள நிலையிலும் அவர்கள் போராட்டத்தை இன்று காலை முதல் முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தந்து. முதற்கட்டமாக 53 குடும்பங்களுக்குரிய 243 ஏக்கர் காணியை தி இன்றைய தினம் விடுவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் மக்கள் எதிர்ப்பினால் மைத்திரிபால வரவில்லை.

எனினும், கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில் வாழ்ந்து வரும் தங்களின் சொந்தக் காணிகள் விடுக்கப்படவில்லை என்றும் மாறாக வற்றாப்பளைக் கிராமத்தைச் சேர்ந்தவர்களின் காணிகள்தான் விடுவிக்கப்படும் பகுதியில் உள்ளன என்றும் கேப்பாப்புலவு மக்கள் குறிப்பிடுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுக்கும் சில உறுதிக் காணிகள் கேப்பாப்புலவுப் பகுதியில் உள்ளதோடு அவையும் விடுவிக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்கள் போராட்டம் ,யாழ் பல்கலைகழகம் முடக்கம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு உரிய விசாரணை கோரி மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தினை நடாத்திவருகின்றனர்.

மாணவர்களால் முன்னெடுத்துவரும் போராட்டத்தினை அடுத்து பல்கலை நிர்வாகத்தி னருடனும் மாணவ பிரதிநிதிகளுடனும் பேச்சு நடத்துவதற்காக அமைச்சர் சுவாமிநாதன் தற்போது யாழ் பல்கலை க்கழகத்திற்கு வருகை தந்துள்ளார்.

இதேவேளை அமைச்சர் சுவாமிநாதனுடனான சந்திப்பு குறித்து செய்தி சேகரிப்பதற்காக பல்கலைக்கழகத்திற்கு உள்ளே ஊடகவி யலாளர்கள் சென்ற சமயம் அவர்களை மாணவர்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்க மறுத்ததனால் அவர்கள் அனைவரும் அவ்விடத்திலிருந்து வெளியேறி சென்றுவிட்டனர்.

இதேவேளை யாழ் பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் மாணவர்களால்முடக்கப்பட்டுள்ளமையினால் ஊழியர்களை பல்கலை க்கழகத்திற்குள் அனுமதிக்க மாணவர்கள் மறுத்து வருகின்றனர்.

இதனால் மாணவர்களுக்கும், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் இடையில் இழுபறி நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் போராசிரியர் வசந்திஅரசரட்ணம், மற்றும் பீடாதிபதிகள் பல்கலைக்கழக த்திற்கு உட்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே தம்மை உள்ளேவிடுமாறு மாணவர்களை துணைவேந்தர் கேட்டவேளை அதற்கு மாணவர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில் இருபகுதியினருக்குமிடையே வாக்குவாதம் இடம்பெற்றது. அத்துடன் மாணவர்கள் இவ்வாறு தொடர்ச்சியாக போராட்ட ங்களை நடத்தினால் அனைவரதும் எதிர்காலம் வீணாவதுடன் பல்கலைக்கழகத்தையும் மூடவேண்டிய நிலையும் ஏற்படலா மெனவும் துணைவேந்தர் தெரிவித்தார்.இந்த சம்பவங்களை பதிவு செய்து கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரின் வீடியோ கம ராவினை பறிக்க முற்பட்டுள்ளார் துணைவேந்தர்.அத்துடன் துணைவேந்தருடன் வேட்டியுடன் நின்ற விரிவுரையாளர் என கருத ப்படும் ஒருவர் ஊடகவியலாளர்களை நோக்கி சரமாரியாக சிங்களமொழியில் ஏசினார்.

மாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்

சிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களுக்கு வணக்கம் செலுத்தும் வகையிலும், சம்பவத்தை கண்டித்தும் மலையகத்தில் லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் பொதுமக்களும், சிவில் அமைப்பினரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஸன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் சிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்..

மேற்படி சம்பவத்தைக் கண்டித்தும், அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த போராட்டம் இன்று பொது மக்களாலும், சிவில் அமைப்பினராலும் தோட்டத்தின் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்து, உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு எமது உணர்வுபூர்வமான அஞ்சலிகள், அப்பாவி மக்களை துன்புறுத்தும் பொலிஸாரின் அடாவடி தனத்துக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் போன்ற சுலோகங்களை ஏந்தியவாறும், அஞ்சலிக்காக மெழுகுவர்த்தியை வைத்தும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கிளினொச்சியில் மக்கள் மீது சிங்கள காவல்துறை தாக்குதல்

வடக்கில் பூரண கதவடைப்பு இடம்பெற்றபோதும் சிங்கள அரச சார்பற்ற, கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையின் செயற்பாடுகள் வழமைபோன்று இட ம்பெற்று வந்தது இந்தநிலையில் குறித்த தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப் போவதாக வதந்தி பரவியது

இதனையடுத்து கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பொலி ஸாரும் விசேட அதிரடிப் படையினரும் அதிகளவில் குவிக்கப்பட்டதை அடுத்து அங்கு பத ற்ற நிலைமை உருவாகியது.

இதனையடுத்து பொலிசாருக்கும், பொது மக்களுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த முறுகல் தற்போது மோதலாக மாறியுள்ளது. இதனால் கிளிநொச்சி நகரில் பெரும்பதற்றம் ஏற்பட்டு ள்ளது.

இதனையடுத்து அங்கு வந்த கலகம் அடக்கும் பொலிசார் உட்பட படையினர் மக்களை அங்கி ருந்து வெளியேறுமாறு பணித்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் ஏற்ப ட்டது.

இந்தநிலையில் பொலிசார் மீது மக்கள் கற்களையும், கையில் கிடைத்த அனைத்தையும் கொண்டு தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.

இதனையடுத்து படையினரும் மக்கள் மீது தடியடிப்பிரயோகம் நடத்தியதுடன், கையில் வைத்திருந்த துப்பாக்கிகளையும் கொண்டு தாக்குதல் நடத்திவருகின்றனர். இதனால் கிளிநொச்சி வைத்தியசாலைக்கும் டிப்போ சந்திக்கும் இடையேயான பகுதி யுத்தகளமாக காட்சி அளிக்கிறது.

இதேவேளை வீதியின் நடுவே டயர்களை கொளுத்தி பொது மக்கள் படையினருக்கு எதிராக போராட்டங்களை தொடர்கின்றனர். இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நிலவுவதுடன் அதிகளவான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் படுகொலை; முடங்கியது வடக்கு, அனைத்து தரப்பும் ஆதரவு

பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் சிங்கள காவல்துறையினரால் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து வடக்கு முழுவதும் இன்று கதவடைப்பு இடம்பெறுகின்றது.

தனியார் மற்றும் அரச பேருந்து சேவைகள் நடைபெறாத நிலையில், வியாபார நிலையங்களும் மூடப்பட்டு சன நடமாட்டம் மிகவும் குறைந்த நிலையில் காணப்படுவதால் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தென் தமிழீழத்திலும் ஆர்ப்பாட்டம்

வடக்கில் இடம்பெறும் ஆர்ப்பாட்ட பேரணியினைத் தொடர்ந்து கிழக்கிலும் இன்று மாணவர்களால் ஆர்ப்பாட்டம் இடம் பெறுகின்றது. கல்லடி விபுலானந்தர் அழகியல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் கடந்த வாரம் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஷன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் சிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டமையை கண்டித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொட்டும் மழையிலும் மாணவர்கள் போராட்டம்: காவல்துறை வரவில்லை

சிங்கள காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான .பல்கலைக்கழக மாணவர்களின் சம்பவத்திற்கு நீதி கோரி யாழ் செயலகம் மற்றும் வடமாகாண ஆளுனர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்திவரும் மாணவர்கள் தங்போது ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கொட்டும் மழைக்கு மத்தியிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்தஒ போராட்டத்திற்கு காவல்துறையினர் கடமைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர் படுகொலை; நாளை அனைத்து பல்கலை மாணவர்களும் போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு நாளை நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்க ளிலும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

உயிரிழந்த சுலக்சன் சகோதரர் மரணமானது பொலிஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் என பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட முன்னதாகவே பொலிஸ் உத்தியோகத்தர்களின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது

உத்தரவினை மீறி வண்டியை நிறுத்தாது சென்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் கூறுகின்றனர்.இவ்வாறு உத்தர வினை மீறிச் சென்ற அனைவரையும் பொலிஸாரினால் துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்ல முடியுமா?

திடீர் விபத்து ஒன்று ஏற்பட்டது, அதனால் பொலிஸாரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் மாணவர் உயிரிழந்ததனை இந்த அனைத்து தரப்பினரும் அறிந்திருந்தார்கள்.

வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் இவ்வாறு மக்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணிக்கின்றனர், இது ஓர் சாதாரண விடயம் என்று பாதுகாப்புச் செயலாளர் கூறுகின்றார்,

எனினும், இந்தக் கூற்றினை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.இது ஓர் சாதாரண நிலைமையல்ல இது ஓர் அசாதாரண நிலைமை யாகும்.

வடக்கில் இடம்பெற்ற காரணத்தினால் நாம் இந்த சம்பவத்தை கைவிட்டு விடப் போவதில்லை.

மாணவர் கொலை செய்யப்பட்டமைக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரியும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் நாடு முழுவதிலும் உள்ள பலக்கலைக்கழகங்களில் நாளை போராட்டம் நடத்தப்படும் என லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…