Face book, Twitter ஆகிய சமூக தொடர்பு தளங்களை இலங்கை கண்காணிக்கும்

திங்கட்கிழமை, பெப்ரவரி 8, 2010
Facebook
இலங்கை தொலைதொடர்பு திணைக்களம் இணைய தளங்களை மிக உன்னிப்பாக கண்காணிக்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதுடன் குறிப்பாக Face book, Twitter போன்ற சமூக தொடர்பு தளங்களை விசேடமாக கண்காணிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிராக வெளி நாடு மற்றும் உள் நாடுகளில் சதிவலை பின்னப்பட்டு இருப்பதனால் அதி உயர் விழிப்பு நிலையில் இருக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தொலை தொடர்பு ஒழுங்கு படுத்தல் திணைக்களம் ( TRC) கூறியுள்ளது.