20 முஸ்லிம் அமைச்சர்களை நியமித்தும் ஆனபலன் ஏதுமில்லை - மஹிந்த முன்னிலையில் முஸ்லிம் பிரதிநிதிகள் அதிருப்தி தெரிவிப்பு
வெள்ளிக்கிழமை, ஜனவரி 15, 2010
கடந்த வாரம் கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற கண்டி மாவட்ட முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி மேற்கண்ட கருத்தைத் தெரிவித்து முஸ்லிம்களின் ஆதரவைக் கோரியிருந்தார். எனினும் அங்கு கலந்து கொண்ட முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த 20க்கும் மேற்பட்ட முஸ்லிம் அமைச்சர்களால் முஸ்லிம் சமூகத்திற்கு எந்தவிதமான நன்மைகளும் ஏற்படவில்லை என்பதை நேரடியாகவே அவரிடம் பெரும் அதிருப்தியுடனும், விரக்தியுடனும் தெரிவித்தனர்.
முஸ்லீம்களின் பலதரப்பட்ட முறைப்பாடுகள் அங்கு ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டன. முஸ்லிம் ஆண்கள் கல்லூரி விடயம், கண்டி தெல்தோட்டைக் கல்லூரியில் தமிழ்ப் பாடநெறி ஆரம்பிக்கப்படாமை போன்ற கல்வித்துறை சார்ந்த விடயங்களும் ஜனாதிபதியின் கவனத்திற்கு அவர்களால் எடுத்துக் கூறப்பட்டன. உயர்கல்வி அமைச்சராக ஒரு முஸ்லிம் நியமிக்கப்பட்டிருந்தும்கூட முஸ்லிம் சமூகத்தின் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவும், தேவை களும் பற்றி அங்கு சமூகமளித்திருந்தவர்களால் பரவலாகவே பிரலாபிக்கப்பட்டன.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, ‘ஸ்ரீ.ல.சு.கட்சியின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களின் கல்விக்கு கூடுதலான சேவைகள் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் கல்வியமைச்சர் அல்ஹாஜ் பதியுத் தீன் மஹ்மூத் செய்த சேவையை இதுவரை எவரும் செய்யவில்லை. அவர் ஆசிரியர் நியமனங்களை வழங்கினார். பாடசாலைகளைத் தரம் உயர்த்தினார். எனவே எமது கட்சி முஸ்லிம்களின் கல்வியைக் கவனிக்கவில்லை என்று கூற முடியாது’ என்றார்.
ஜனாதிபதியின் இந்த விளக்கம் சமூகமளித்திருந்த முஸ்லிம் அமைப்பின் பிரதிநிதிகளுக்குத் திருப்தியை அளித்ததாகத் தெரியவில்லை. அவர்களின் கருத்துக்கள் வேறு விதமாகவே காணப்பட்டன. ஐ.தே.கட்சி, ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் மற்றும் ஜே.வி.பி போன்ற கட்சிகளில் போட்டியிட்டு மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு பின்னர் தங்களுடைய சுயநலன்களுக்காக கட்சிமாறி அரசாங்கத்தின் பக்கம் பாய்ந்து வந்தவர்களுக்கு ஜனாதிபதி அன்பளிப்பாகவே அமைச்சர் பதவிகளைக் கொடுத்து அவர்களை மௌனமாக்கி வைத்திருந்தார் என்பது அண்மையில் அரசாங் கத்திலிருந்து வெளியேறியுள்ள (ஜனாதிபதி வேட்பாளர்) முன்னாள் உயர்கல்விப் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா, பிரதிக் கல்வி யமைச்சர் சச்சிதானந்தன் போன்றோரின் வாக்கு மூலங்களில் இருந்து தெளிவாகின்றது.
எனவே சுயநலத்திற்காக அரசு பக்கம் தாவிய கட்சி மாறிகளுக்கு அமைச்சர் பதவிகளைக் கொடுத்ததை எமது முஸ்லிம் சமூகத் திற்குச்செய்த ஒரு சேவையாக ஜனாதிபதி பெருமையாகச் சொல்லிக்காட்டி அதற்காக ஆவரது ஆட்சிமுறைக்கு மீண்டும் ஆதரவு கோருவதை முஸ்லிம் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது.
எதிர்பாராத விதமாக முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ பண்டார நாயக்கா சுட்டுக்கொலை செய்யப்பட்டபோது நிலைகுலைந்து போயிருந்த ஸ்ரீ.ல.சு.கட்சியையும், அவரது மனைவி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவையும் புத்துணர்வூட்டி மீண்டும் அக்கட்சியை அரசியலில் தடம்பதிக்க வைத்து ஆட்சிக் கட்டிலில் ஏற்றியததற்கு விசுவாசமாகவே முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ அம்மையார் அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களுக்கு அத்தகைய கல்வி அமைச்சை வழங்கி அவரது எண்ணம்போல் நாட்டின் கல்வித் துறையை மேம்படுத்தும் அதிகாரங்களையும் வழங்கியிருந்தார். அதற்காக கட்சிமாறிகளுக்கு அமைச்சர் பதவிகளைக் கொடுத்து அவர்களை அதிகாரக் கிறக்கத்தில் மௌனிக்க வைத்திருந்து சமுதாயத்தின் கல்வி நிலையைச் சீர்படுத்த இடமளிக்காத இந்த அரசாங்கத்திற்கு எவ்வாறு ஆதரவு அளிக்க முடியும்?
ஸ்ரீ.ல.சு.கட்சியின் ஆட்சிக்காலத்தில் சுதந்திரக்கட்சியின் தனித்துவ மான கொள்கைகளே அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆனால் இப்போதுள்ள பொ.ஐ.முன்னணியிலோ ஜாதிக ஹெல உறுமய போன்ற இனவாத சக்திகள் எல்லாம் உறைந்து போயுள்ளன. அவர்களின் இனவாத சிந்தனையோடுதான் மஹிந்த சிந்தனை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது எனபது முஸ்லிம் சமூகத் திற்கு மறைவான விடயமல்ல.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி
















