88 மில்லியன் சமுர்த்தி நிதி மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு - ஊழலிற்கு எதிரான அமைப்பு

திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
சமுர்த்தி நிவாரண நிதி திட்டத்தில் இருந்து 88 மில்லியன் ரூபா நிதியினை மஹிந்தவின் பிரச்சாரத்திற்கு அதன் பணிப்பாளர் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு ஊழல்களிற்கு எதிரான அமைப்பு கூறியுள்ளது.

வழமைக்கு மாறாக ஒரு திட்டத்தினை முன்மொழிந்து அதாவது மக்களிற்கு தெளிவு எனும் பெயரில் திட்டம் ஒன்றினை தீட்டி இந்த பணத்தினை ஒவ்வொரு மாவட்டங்களிலும்  செலவழிக்கப்பட்டுள்ளதாக ஊழலிற்கு எதிரான அமைப்பு கூறியுள்ளது. இது தொடர்பான ஆவணங்களையும் அந்த அமைப்பு தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.