முள்ளி வாய்க்காலில் 40,000 பேர் அரச படைகளினால் கொல்லப்பட்டனர் - முன் நாள் ஐ. நா பேச்சாளர்
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2010
திரு கோடன் வைஸ் ஐக்கிய நாடுகளின் கொழும்பு செயலக பேச்சாளராக இருந்தவர். மனிதாபிமான பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தவர் மட்டுமன்று இதனால் ஐக்கிய நாடுகள் சபை மேலாளர்களாலும், அரசாங்கத்தினராலும் அப்போது அடக்கி வாசிக்குமாறும் எச்சரிக்கப்பட்டவர்.
இப்போது அவர் ஐக்கிய நாடுகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இப்போது அவர் சுதந்திரமாக பேசமுடியும் ஆகையால் அவுஸ்ரேலியாவை பிறப்பிடமாக கொண்ட இவர் அவுஸ்ரேலிய ஒலிபரப்பு கூட்டு தாபனத்திற்கு பேட்டியளித்தார்.
இவர் மேலும் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளதாவது இறுதி நேரத்தில் 300,000 மக்களும், போராளிகளும் நியூயோர்க் மத்திய பூங்கா அளவினை உடையதான பகுதிக்குள் இருந்தனர். அதனை சுற்றி இலங்கை படைகள் அனைத்து வகையான சிறிய, பெரிய ஆயுதங்களால் தாக்கினர். இதன் போது 40,000 வரையான மக்கள் கொல்லப்பட்டனர் என்றார்.
இந்த தகவல் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டினுள் இருந்து வந்த சிலரால் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் ஆனால் இவர்கள் புலிகளோ அல்லது தமிழ் மக்களோ அல்லர் எனவும் கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தினை தவறாக வழி நடத்தியுள்ளது அல்லது பொய்களை கூறியுள்ளது என கூறிய கோடன் வைஸ் அரசாங்க அதிகாரிகள் பாதுகாப்பு வலையத்தில் இருந்த மக்களை குறைத்து மதிப்பீடு செய்ததாக கூறியுள்ளார்,
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி
















