1100 வருடம் பழமையான இரு இந்துக்கோவில்கள் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு
செவ்வாய்க்கிழமை, மார்ச் 2, 2010
1100 வருடங்கள் பழமை வாய்ந்த இரு கோவில்களும் இஸ்லாமிய பல்கலை கழகத்திற்கு நூலகம் அமைப்பதற்கான கட்டுமானப்பணியின் போதே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சக்தி வழிபாட்டினை குறிக்கும் அம்மன் சிலைகள், வினாயகர் சிலைகள், சிவபெருமான் சிலை மற்றும் நந்தி, லிங்கம் ஆகியன இந்த கோயில்களுள் இருந்ததாக கூறப்படுகின்றது.
06 மீற்றர் நீளமும் 04 மீற்றர் உயரமும் கொண்ட கோயிகளுக்குள்ளேயே இந்த சிலைகள் இருந்துள்ளன. இந்த கோயில்கள் இராஜ இராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழனின் காலத்தில் கட்டப்பட்டதாக தொல்பொருளாய்வாளர் கூறியுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் எரிமலை வெடித்து சிதறியதால் இந்த கோயில்கள் மூழ்கியிருக்கலாம் என கூறப்படுகின்றது.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி
















