ஸ்ரிங்கர் ஏவுகணை கொள்வனவு செய்ய முயற்சித்த இரு தமிழர்களுக்கு அமெரிக்காவில் ஆயுள் தண்டனை!
திங்கட்கிழமை, ஜனவரி 11, 2010
கனேடிய தமிழர்களான சுகி சபாரட்னம், திருத்தணிகன் தணிகாசலம் ஆகியோரே இவ்வாறு தண்டனை பெறவுள்ளனர். கடந்த ஒருவருடத்திற்கு முன்பாக எவ்.பி.ஐ. அதிகாரிகளினால் (மறைந்திருந்து செயற்படும்) கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 19 2006 இல் வின்னி என்ற ஆயுத தரகரிடம் இந்த இருவரும் ஆயுத பேரத்தில் ஈடுபட்டனர். ஆனால் உண்மையில் வின்னி என்பவர் எவ்.பி ஐ இன் மறைமுக செயற்ப்பாட்டளராக செயற்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுத தரகருடன் சென்று ச்டிங்கர் ஏவுகணைகளையும் பார்வையிட்டு அதற்கான கொடுப்பனவுகளை கொடுத்த பின்னர் இவர்களை எவ்.பி ஐ கைது செய்ததாகவும் கூறப்பட்டது. அத்துடன் இவர்கள் விடுதலைப்புலிகளுடன் இலங்கையில் தொடர்பு கொண்டு ஸ்ரிங்கர் ஏவுகணை தொடர்பாக தொலைபேசியில் உரையாடியதனையும் ஆதாரமாக கொண்டே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி















