வெளி நாடுகளில் வதியும் இலங்கை ஊடகவியலாளர்கள் நாடு திரும்பலாம் - சட்ட மா அதிபர்
வியாழக்கிழமை, மார்ச் 11, 2010
வெளி நாடுகளில் பல ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வதிகின்றனர். அவர்கள் இலங்கை திரும்புவதாயின் போதிய பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படும் என கூறியுள்ளார் மொஹான் பீரிஸ்.
அமெரிக்க ஊடகவியலாளர் பாது காப்பு அமைப்பு அண்மையில் பீரிஸ் அவர்களை சந்தித்தபோதே இந்த உத்தரவாதத்தினை வழங்கியுள்ளார். வெளி நாடுகளில் இலங்கை உடகபியலாளர்கள் இருந்து கொண்டு அரசாங்கத்தினை தாக்குவதில் பிரயோசனம் இல்லை. அவர்கள் இங்கு வந்து எம்முடன் இணைந்து வேலை செய்ய வேண்டும். உண்மையில் ஊடகவியலாளர்களை நாம் வெறுக்கவில்லை அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய விரும்புகின்றோம் என்றார் மொஹான் பீரிஸ்.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி















