வியற்னாம் - மகிந்த உறவுகள் பலமடைகின்றன எண்ணெய் அகள்விற்கும் அனுமதி. நோக்கம் என்ன?
வியெற்னாம் அரசும் ஸ்ரீலங்கா அரசும் தமது உறவுகளை பலப்படுத்தும் பொருட்டு பல்வேறு ஒப்பந்தங்களையும்,உடன்பாடுகளையும் செய்து கொண்டுள்ளன. கடந்த 10, 11 ம் திகதிகள் ஸ்ரீலங்கா அரசின் வெளிவிவகார அமைச்சர், வியற்னாம் அரசின் பிரதி அமைச்சர் டாவோ வியெட் றுங் அவர்களும் கலந்து கொண்டு இந்த ஒப்பந்தங்களை மேற்கொண்டதுடன் மகிந்த அவர்களின் இந்த வருடத்திகான வியற்னாமிற்கான இரண்டாவது வருகை பற்றியும் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது. விவசாயம், மீன்பிடி,தொழில் நுட்பம் தேசிய பாதுகாப்பு,போன்ற விடயங்களிலும் கைதிகளை பரி்மாற்றம் செய்வது தொடர்பிலும் இந்த மூன்று வருட ஒப்பந்தம் கைசாத்தானது.
இதே நேரம் எண்ணெய் அகழ்விற்கான தமது கரிசனையினை வியெற்னாம் ஸ்ரீலங்கா அரசிடம் கூறியதாகவும் அதற்கு ஸ்ரீலங்கா அரசு சம்மதித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்த உறவு வளர்வதற்கான தேவை என்ன என்பது பற்றி அனைவரும் அறிய பலரும் ஆர்வமாக உள்ளனர். ஏனெனில் இலங்கை அரசு 5.1 மில்லியன் ரூபா முதலீடு மட்டுமே வியற்னாமில் செய்துள்ளது அதேபோல் வியற்னாம் ஸ்ரீலங்காவுடன் செய்து வந்த வர்த்தகம் 50 மில்லியனுக்கு குறைவானதே. ஆகவே இத்தகய சூழலில் எதாவது பலம் பொருந்திய நாடுகள் வியற்னாமூடாக தமது செல்வாக்கினை ஸ்ரீலங்காவில் செலுத்த முற்படுகிறதா என சந்தேகம் வலுத்துள்ளது. உதாரணமாக சீனா இத்தகய வேலைகலில் இறங்கியுள்ளதா எனவும் கேள்வி எளுகின்றது.
அல்லது மகிந்த தென் ஆசியாவில் பெளத்த மத நாடுகளை ஒன்றிணைத்து மத ரீதியாக ஸ்ரீலங்காவினை தலைமையேற்கும் ஒரு கூட்டணியினை உருவாக்கி அதனை இந்து மத நாடுகளிற்கு எதிராக குறிப்பாக இந்தியாவிற்கு எதிரான செயற்பாட்டினை உருவாக்க முயல்கின்றனவா எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி
















