விடுதலைப்புலிகள் சந்தேக நபர்கள், முன் நாள் போராளிகள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படலாம்

செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24, 2009
AI
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் சித்திரவதைக்கு உட் படுத்தப்படக்கூடிய அபாயம் நிலவுகிறது என சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறுவர் போராளிகள் உள்ளிட்ட பெருந்தொகையான விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தற்போது படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குறைந்த பட்சம் 12 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் பட்டு வருகின்றனர் எனக் குறிப்பிடப் படுகிறது.
விடுதலைப்புலி சந்தேக நபர்களை விசாரணை செய்யும் பொறிமுறையில் வெளிப்படைத் தன்மையில்லை என சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னாள் போராளிகள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளின்போது சர்வதேச சட்ட திட்டங்கள் பின்பற்றப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.