லியன்பொஸ்கோ சென்றுவந்த பின்னரே குழு அமைப்பு - பான் கி மூன்
புதன்கிழமை, மார்ச் 10, 2010
இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக லியான் பெஸ்கோ இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நடவடிக்கையானது குழு அமைக்கும் முயற்சியினை பான்கி மூன் இழுத்தடிப்பதாகவே அமைகின்றது.
லியான் பெஸ்கோவின் இலங்கைக்கான விஜயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைத் தலைவர் தகவல்களை திரட்டிவருவதாகவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர். லியான் பெஸ்கோவின் இலங்கை விஜயத்திற்கான திகதியை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான்கீமூன் தீர்மானிப்பார் எனவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்த நிபுணர்கள் குழுவில் அங்கம் வகிக்கக்கூடியவர்களின் பெயர் விபரங்களை பான்கீமூன் உத்தியோகப் பற்றற்ற முறையில் தயாரித்துவருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி















