சனிக்கிழமை , மார்ச் 6, 2010
சிறிலங்காவின் வெளி நாட்டு அமைச்சர் ரோகித போகொல்லாமவின் மூத்த மகனிற்கு ஐ. நாவில் வேலை எடுக்க நம்பியாரின் சிபார்சினை கேட்டுள்ளார் போகொல்லாம.ஐ. நா செயலாளரின் பேச்சாளரும், செயலருமான நேர்ஸ்ர்கி அவர்களிடம் மேற்படி விடயத்தினை இன்னெர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது. அதாவது ஐ. நாவின் மூத்த பணியாளர் விஜை நம்பியாருக்கு கடித மூலமாக தனது மகனிற்கு வேலை பெற்று தரும்படி கோரியிருந்ததாக இன்னெ சிற்றி பிறஸ் கேள்வி எழுப்பியது. இதற்கு ஐ. நா செயலர் பான்கி மூன் அவர்களின் செயலாளர் இது தொடர்பாக தான் அராய்வதாக கூறியுள்ளார்.