ராஜீவ்காந்தி கொலை வழக்கு மே மாதம் வரை ஒத்திவைப்பு.

சனிக்கிழமை , பெப்ரவரி 27, 2010
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் மற்றும் புலனாய்வு துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் உட்பட பலர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இவர்கள் 2 பேரும் தலைமறைவானதை அடுத்து, இவர்கள் மீதான வழக்கு தனியாகப் பிரிக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறது.சென்னை முதலாவது தடா நீதிமன்ற நீதிபதி பி.ராமலிங்கம் இந்த வழக்கை விசாரித்து வருகிறார். நேற்று வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.அப்போது சி.பி.ஐ. அதிகாரிகள், வக்கீல் ஆகியோர் நீதிபதி பி.ராமலிங்கத்திடம் இது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.இந்த வழக்கை நீதிபதி எதிர்வரும் மே மாதம் வரை ஒத்திவைத்தார்.