யாழில் இந்திய துணை தூதரகம் - நிருபாமா தெரிவிப்பு

செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகம் அமைக்க, இலங்கை அரசு ஒப்புக் கொண்டுள்ளது என இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் கூறியதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நிருபமா ராவ் 3 நாள் பயணம் மேற்கொண்டு இங்கு வந்திருந்தார். சுற்றுப்பயணத்தின் இறுதி தினமான திங்கட்கிழமை, செய்தியாளர்களிடம் கூறுகையில்,

"யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகம் அமைப்பது குறித்து அதிபர் மகிந்த ராஜபக்ஷவுடன் விவாதித்தேன். அவரும் ஆக்கப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.துணைத் தூதரகம் அமைக்கப்பட்டால் அங்குள்ள தமிழர்களுக்கு அது உதவியாக அமையும்.

அதிபர் ராஜபக்ஷவைத் தோற்கடிக்க இந்திய உளவு அமைப்பின் சில அதிகாரிகள் பணிபுரிந்ததாக ஆளும் கட்சித் தலைவர்களில் ஒருவரான நந்தனா குணதிலகே கூறியதில் உண்மையில்லை. மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என இந்தியா உறுதிபூண்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பிரச்சினைகளைத் தீர்க்க ஏப்ரல் 8இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அதிக கவனம் செலுத்துவேன் என அதிபர் ராஜக்ஷ தெரிவித்துள்ளார்" என்றார் நிருபமா ராவ்