முள்ளிவாய்க்காலின் பின்னர் தமிழர் இருப்பு - பிரான்சில் ஆய்வரங்கு

வியாழக்கிழமை, பெப்ரவரி 25, 2010
France
முள்ளிவாய்க்காலின் பின் தமிழர்களின் இருப்பு குறித்தான ஆய்வரங்கம் ஒன்று பெப்ரவரி 21 ஞாயிற்றுக்கிழமை பாரிசில்  இடம்பெற்றது. தமிழ் சமூக மேம்பாட்டு அசைவியக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆய்வரங்கினை அரசியல் ஆய்வறிஞர் ஏ.சி.தாசீசியஸ் அவர்கள் தலைமையேற்று
நடாத்தினார்.

ஊடகவியலாளர்கள் - கலைஞர்கள் - வர்த்தக பிரிதிநிகள் இளையோர்கள் - சமூக ஆர்வலர்கள் என 10க்கும் மேற்பட்ட பொது அமைப்புகளின் பிரிதிநிதிகள்
கலந்து கொண்டு பங்கெடுத்து ஆய்ந்தனர்.

"அகவிடுதலைப் பண்பாடு " கவிஞர் பாலகணேசன்
" முள்ளிவாய்காலின் பின் மண்ணில் பெண்களின் நிலை" சமூகசேவகி சுபா
" ஒன்றுபடுதல் "  இசைஞர் தமிழ்செல்வன்
" தமிழர்களின் போராட்டங்களும் பிரென்சு ஊடகங்களின் பார்வையும் " இளையோர் அமைப்பு மகிந்தன்
" சமகாலத்தில் தமிழ் ஊடகங்களின் பங்கு " ஊடகர் எஸ்.கே.ராஜன்
" தமிழ் தேசியம் " சிலம்பு அமைப்பு முகுந்தன்
" சர்வதேச அரங்கில் தமிழர் அரசியல் " அரசியலாளன் அன்ரன்
- இவையே இந்த ஆய்வரங்கின் உரைஞர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துரைகளாகும்.

கருத்தாய்வில் பங்கெடுத்த அனைவரும்  5 குழுக்களாக பிரிந்து உரைகளையொட்டி ஆய்வலசல் செய்தனர். முன்வைக்கப்பட்ட கருத்துரைகள் குறித்து விவாதித்தித்தனர்.
ஒவ்வொரு குழுவும் தங்களுள் இருவரை தேர்வு செய்து தாங்கள் கண்ட தீர்மானங்களை அரங்கில் முன்வைத்தனர். அத்தோடு உரைஞர்களிடம் வினாக்களையும் தொடுத்தனர்.

6மணி நேர ஆய்வரங்காக அமைந்த கருத்தமர்வுசமகால சமூக பண்பாட்டு வியடங்களை உள்ளடக்கியதாக தொடர்சியாக இடம்பெறுமென ஏற்பாட்டளர்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.