முத்துவல் இராணுவ முகாம் அருகில் அடிகாயங்களுடன் சடலம் மீட்பு

திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
கொழும்பு, முத்துவல் இராணுவ முகாம் அருகே களனி ஆற்றுக்கு பின்புறமாக இரண்டு சடலங்கள் கண்டெடுக்கபப்ட்டுள்ளது. இந்த சடலங்கள் இன்னமும் உரிமை கோரப்படவில்லை. பேக்குசன் ரோட் மட்டக்குளியின் அருகே இந்த இராணுவ முகாம் இருப்பதாகவும் அந்த இடத்திலேயே இந்த சடலங்கள் கண்டெடுக்கபட்டதாகவும் கூறப்படுகின்றது. 35, 40  வயது மதிக்கதக்க இந்த சடலங்கள்  அடிகாயங்களுக்கு உட்பட்டவையாக இருந்ததாகவும் தற்போது வைத்திய சாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த இராணுவ முகாம் அருகில் முன்பும் பல சடலல்ங்கள் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.