மீன்பாடும் தேன் நாட்டில் ”டங்கு டங்கடா” இலக்கிய விழா

திங்கட்கிழமை, செப்டம்பர் 28, 2009
kizakku
கிழக்கு மாகாண கல்வி மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்ப்பாட்டில் 13வது மாகாண இலக்கிய பெருவிழா 'எழுவானில் இலக்கிய காவியம் "என்ற தொனிப்பொருளில் அம்பாறை டி.எஸ்.சேனாநாக்கா மகா வித்தியாலய மண்டபத்தில் கடந்த வெள்ளி ,சனி ஆகிய நாட்களில் நடை பெற்றது. மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்கா தலைமையில் நடை பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக கலந்து கொண்டு கலை ,மற்றும் இலக்கிய துறை சார்ந்த விற்பனர்களுக்கு முதலமைச்சர் விருதுகளை வழங்கி கெளரவித்தார்.
kizakku2


நான் இந்த  விழாவுக்கு செல்லவில்லை ஆனால் இந்த படங்களை பார்த்த போது மனதில் கனமாய் இருந்தது. மீன் பாடும் தேன் நாடு, கலை பண்பாட்டுக்கென தனித்துவமான , இனிமையான அம்சங்களை கொண்ட பூமி எங்கள் தென் தமிழீழம். எத்தனையோ கலை பொக்கிசங்களையும் கலைஞர்களையும் ஆர்வலர்களையும் கொண்ட , பெற்றெடுத்த எங்கள் தமிழர் தாயகத்தில். இப்போ டங்கு டங்கடா என சிங்களர் தெருக்கூத்தடிக்க, சிங்கள மாணவிகள் சாமரம் வீச விழா ஊர்வலம் நடந்தது. முதலமைச்சரும் சிங்களவன் சாமரம் வீச கொடுத்து வைக்கணும் என கருதியோ என்னமோ மகிழ்வுடன் கலந்து கொண்டார் போல.
kizakku

கிழக்கின் உதயம், எழுவானில் கலை இலக்கியம், மீன் பாடும் தேன் நாடு யாருக்கு? மட்டுமகள் பாடல் எங்கே? வாவிமகள் எந்த மொழியில் இனி பாடுவாழ். தயவு செய்து தென் தமிழீழ மக்கள் பிரதினிதிகள், தொண்டர்கள். பிரதேசவாதம் தனித்துவம் என்பதனை மறந்து மீண்டும் நாட்டிற்காக ஏதாவது செய்வோமா? சரி பிரதேச  வாதத்தினையும், தனித்துவத்தினையும் கைவிட வேண்டாம் ஆனால் அதனை தமிழனின் தாயக பூமியாக பாதுகாக்காவாவது பயன்படுத்துங்களேன்.