மாவீரன் பண்டார வன்னியன் சிலை இராணுவத்தால் சிதைக்கப்பட்டுள்ளது

செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
pandaravanniyan
ஒட்டு சுட்டான் கற்சிலை மடுவில்  நிறுவப்பட்டிருந்த  மாவீரன் பண்டார வன்னியனின் சிலையினை சிங்கள படை சிதைத்துள்ளது. நேற்று முந்தினம் அந்த பகுதிக்கு சென்ற மக்கள் இதனை அவதானித்துள்ளனர். இந்த செய்தியினை உடனடியாக அரசாங்க அதிபர் மற்றும் சக்தி வானொலிக்கும் தைரியமாக எடுத்துக்கூறியுள்ளனர்.
படையினரின் இத்தகைய செயலால் தாம் மனவேதனை அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மாவீரன் பண்டார வன்னியனின் சிலை நீண்டகாலமாக வன்னியின் இராட்சியத்தினையும் அன்னிய சக்திகளுக்கு எதிரான போரினையும் நினைவு படுத்தி அமைக்கப்பட்டிருந்தது. மக்களால் போற்றப்படும் வணங்கப்படும் ஓர் நினைவிடமாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பண்டாரவன்னிய மன்னனின் சிலையின் தலைப்பாகத்தினை முற்றாக சிதைக்கபட்டிருப்பதாக மக்கள் கூறியுள்ளனர்.