மஹிந்த கொலை சதி மேலும் பல தகவல்கள் சிக்கியுள்ளதாம் - இரகசிய பொலிசார்

திங்கட்கிழமை, பெப்ரவரி 8, 2010
தேர்தல் முடிவுகள் மஹிந்தவுக்கு சாதகமாக வந்தால் மஹிந்த இராசபக்‌ஷவை கொலை செய்வதற்கும், கலகங்கள் செய்வதற்கும் சரத் பொன்சேகா திட்டமிட்டு இருந்ததாக இது தொடர்பாக விசாரணை நடாத்தி வரும் பொலிசார் கூறியுள்ளனர்.
தேர்தல் முடிவுகள் வெளிவரும் நேரத்தில் பொன்சேகா அணியினர் கறுவா தோட்டத்தில் அமைந்துள்ள விடுதியில் பல் நாட்டு ஊடகவியலாளர்கள் உட்பட 70 முக்கிய உறுப்பினர்கள் கூடி இருந்தனர்.

இவர்களுடன் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரும் இருந்தனர். மட்டுமன்றி கொழும்பு புற நகர்ப்பகுதிகளில் ஓய்வு பெற்ற இராணுவத்தினர் ஆயுதங்கள் வெடிப்பொருட்களுடன் தயாராக இருந்ததாக கைது செய்யப்பட்ட இராணுவத்தினர் வாக்கு மூலம் தந்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.

இவர்களின் தகவலின் அடிப்படையில் கோகெறல, தெனியாய, மற்றும் பல இடங்களில் வெடிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர் பொலிசார். ஆனால் பொலிசாரினால் ஏற்கனவே ஓர் திட்டம் வகுக்கப்பட்டு அது தொடர்பாகவே கேளிவிகள் கேட்கப்பட்டதாக ஊடகவியலாலர்கள் கூறியுள்ளனர்.