மஹிந்தவுடன் வர்த்தக உறவு ! கனடா உதயன் பத்திரிகை தாக்கப்பட்டது

திங்கட்கிழமை, பெப்ரவரி 22, 2010
Canada uthayan
மஹிந்த இராஜபக்‌ஷவுடன் வர்த்தக உறவு கலந்துரையாடலில் பங்குபற்றியதற்காகவும் அதன் செய்தியினை முன்பக்கத்தில் பிரசுரித்தமைக்காகவும் கனடா ஸ்காபரோவில் அமைந்துள்ள உதயன் பத்திரிகை  தாக்கப்பட்டுள்ளது.
கனடா உதயன் பத்திரிகை நிர்வாகி குலா செல்லத்துரை அவர்கள்  கனடா - இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவராக இருகின்றார். இவர்
அண்மையில் இலங்கை சென்று மஹிந்த இராசபக்‌ஷவுடன் கலந்துரையாடலில் பங்குபற்றியதுடன் மஹிந்தவுடன் சேர்ந்து புகைப்படம் ஒன்றினையும் எடுத்து அதனை உதயன் பத்திரிகையில் முன் அட்டையில் பிரசுரித்தாராம்.

இதனால் ஆத்திரம்  அடைந்த மக்கள் செல்லத்துரை அவர்கள் பத்திரிகை அலுவலகம் செல்லும் வேளை பார்த்து அங்கு எதிர்ப்பு தெரிவித்து காரியாலையத்தையும் தாக்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஒருபக்கம் பொருளாதார தடை என்ற போராட்டம் தொடர இன்னொரு பக்கம் வர்த்தக உறவை பேணுவதும். இதே வேளை ஈவிரக்கமின்றி 40,000 வரையான மக்களை கொன்ற மஹிந்தவுடன் புலம் பெயர் மக்கள் உறவுகளை வைத்து கொள்ளல் ஆகியவையே தாக்குதலிற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.