மஹிந்தவுக்காக அசத்தப்போவது யாரு? அங்கயன் குழுவா, டக்ளஸ் குழுவா?
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 2, 2010
இந்த தேர்தலில் சிறிலங்கா சுதந்திர கட்சியினை சேர்ந்த ராம நாதன் அங்கயன் அணி பர பரப்பாக மஹிந்தவின் ஆதரவில் களத்தில் இறங்கியுள்ளது.
இந்த தேர்தலில் ஈ.பி.டி.பி க்கா சுதந்திர கட்சிக்கா அதிக இடம் பெறுவது என்ற வகையில் டக்ளஸ் உடன் அங்கையன் அணி களத்தில் போட்டியாக உள்ளது. தவிர அங்கையன் அணியே ஐக்கிய தேசிய கட்சிக்காக போட்டியிடும் மகேஸ்வரன் அணிக்கும் சவாலாக விளங்குகின்றது.
அங்கையன் அணியின் குளறுபடிகளை டக்ளஸ் கண்டும் காணாததுபோல இருப்பதாக தகவல் மட்டுமன்றி டக்ளஸ் இன் ஆட்களுக்கும் அடிபோடுவதற்கும் ஏன் யாழ் மா நகர சபை மேயருக்கு கூட அடிபோடும் அளவிற்கு அங்கையன் அணிக்கு மஹிந்தவினால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாம்.
கூடவே சாவகச்சேரி சிறுவன் கொலை சம்பவத்தினை போட்டு கொடுத்ததும் அங்கையன் அணிதான் என கூறப்படுகின்றது. நேற்று யாழில் நடந்த மஹிந்தவின் தேர்தல் கூட்டத்திற்கும் குளறுபடிகளை செய்ததும், மக்களை கொண்டுவருகின்றேன் என கூறிவிட்டு கொண்டுபோகாததும் இந்த அங்கையன் அணிதானாம் ஏனெனில் டக்குவின் நன்மதிப்பை குறைக்கவேண்டும் என்பதே அங்கையன் அணியின் திட்டம் என கூறப்படுகின்றது. இது அங்கையன் திட்டமா? அல்லது மஹிந்த திட்டமா?
ஆ மொத்தத்தில் மஹிந்தவிற்காக யாழில் அசத்தப்போவது அங்கையன் குழுவா அல்லது டக்ளஸ் குழுவா?
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி















