மட்டு மேயரை நீக்க கருணா, பிள்ளையான் ஆகியோர் ஒருங்கிணைந்து தாக்குதல்
ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 14, 2010
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகாவை ஆதரித்ததால் பொதுசன ஐக்கிய முன்னணியில் இருந்து அவரை நீக்கவேண்டும் என பிள்ளையானும் அதே வேளை மன சாட்சிக்கு புறம்பாக சிவசங்கீதா செயற்பட்டார் ஆகவே அவரை பொது தேர்தலில் பொதுசன ஐக்கிய முண்ணனி சார்பாக இனிமேல் தேர்தல்களில் நிறுத்த முடியாது என கருணாவும் கூறியுள்ளனர்.
ஆக மொத்தத்தில் மஹிந்தவுக்கு ஒரே அணியில் கருணா, பிள்ளையான், சிவ சங்கீதா ஆகியோரை எப்படி வைத்து காய் நகர்த்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதில் தப்ப கூடிய நிலையில் இருப்பவர் பிள்ளையானே காரணம் மாகாண முதல்வராக இருப்பதாலே ஆகும். மற்றவர்கள் தேர்தலில் நின்று தோற்றால் அவர்களுக்கு மீண்டும் நியமன எம்.பி பதவி கொடுக்கப்படுவது இம்முறை அரிதாகவே இருக்கும்.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி















