மட்டு நகரில் இருந்து படகில் அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 22 பேர் கைது

வியாழக்கிழமை, மார்ச் 4, 2010
Aus boat
மட்டக்களப்பில் இருந்து கடல்வழியாக அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட  22 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர். மட்டக்களப்பு நாவலடி கரையோர பகுதியில் வீடு ஒன்றில்  வைத்து கைது செய்யப்பட்ட 22 பேரும்  சிலாபம், உடப்பு, மட்டக்களப்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸ் கூறியுள்ளனர். இவர்களுடன் வான் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
கடலோடிகளின் வரைபடங்கள், உலருணவுகள்,திசை அறி கருவிகள், எரிபொருட்கள்,மருந்துப்பொருட்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் கூறியுள்ளது.