மட்டகளப்பு மானகர சபை மேயர் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிப்பு

திருத்தப்பட்ட செய்தி தரவேற்றம் 08.01.2010
வியாழக்கிழமை, ஜனவரி 7, 2010
Batti mayor
மட்டக்களப்பு மா நகர சபை மேயரும் அண்மையில் பிள்ளையான் குழுவில் இருந்து கருணாவின் வேண்டுதலிற்கு அமைய சிறிலங்கா சுதந்திர கட்சியில் இணைந்தவருமான    சிவகீதா பிரபாகரன் அவர்கள் சரத்பொன்சேகாவுக்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார். இன்று மட்டகளப்பு மாநகர சபை மண்டபத்தில் எதிர் கட்சி தலைவர் ரணில் விக்கிரம சிங்க முன்னிலையில் தனது ஆதரவை பத்திரிகையாளர் மா நாடு ஒன்றினை கூட்டி தெரிவித்தார். இதே வேளை  சரத்பொன்சேகா வந்தால் துணைப்படைகளை ஒழிப்பேன் என கூறியதனை அடுத்து துணைப்படைகளில் உள்ளவர்கள் சரத் பொன்சேகா பக்கம் சாயவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த வகையில் பிள்ளையான் குழுவினர் மற்றும் கருணா குழுவில் இருந்த பலர் சரத்பொன்சேகா அணியுடன் பேச்சுவார்த்தை நடாத்திக்கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் நடக்கும் இந்த விரும்பத்தகாத செயலினால் கருணா, அலிஷாகிர் மெளலானா ஆகியோர் மீது மஹிந்தவுக்கு செலவுக்கு ஏற்ப வரவு இல்லை என கருதுவதாக கூறப்படுகின்றது.ஒட்டு குழுக்கள் ஆளும் கட்சியுடந்தான் சேர்ந்து இருக்க வேண்டும் ஆகவே சிலவேளை சரத் வெற்றி பெற்றால் என்ன செய்வது என்பதற்கான நடவடிக்கைகளே இவ்வாறான மாற்றங்கள் ஆகும்.