போர்குற்றம் தொடர்பிலான இலங்கையின் விசாரணையில் நம்பிக்கை இல்லை - நவ்வி பிள்ளை

சனிக்கிழமை , பெப்ரவரி 13, 2010
Navvi
போர் குற்றம் தொடர்பில் இலங்கை உள் நாட்டிலேயே விசாரணை செய்வதில் ஐக்கிய நாடுகள்சபை நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என நவ்வி பிள்ளை கூறியுள்ளார்.
இதே இலங்கையில் வேளை போர் குற்றம் தொடர்பான பிரச்சினை உரிய முறையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில்  வெளிப்படுத்தப்படவில்லை, கையாளவில்லை என தனது அதிருப்தியினையும்தெரிவித்துள்ளார்.
எல்லோரும் இலங்கையில் நடைபெறப்போகும் தேர்தலினை பார்த்து கொண்டிருக்கின்றோம். என்பதனை மஹிந்த சமரசிங்கவை சந்தித்தபோது ஞாபகப்படுத்தினேன். என கூறிய நவ்வி பிள்ளை இலங்கை அரசாங்கம் வெளி நாட்டு சக்திகளை விசாரணைக்கு அனுமதிக்க போவதில்லை என்ற கூற்றினை நிராகரித்தார்.