வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2010
பிரித்தானிய பாதுகாப்பு நிழல் அமைச்சரும் மஹிந்தவின் நண்பருமான லியன் பொக்ஸ் சனிக்கிழமை இலங்கை செல்லவிருக்கின்றார். இவரது பயணத்தின் முக்கிய நோக்கம் மஹிந்த மற்றும் சரத்பொன்சேகா ஆகியோருக்கு இடையே சமரசம் பேசி பொன்சேகாவை ஒருவாறு மீட்பதே ஆகும் என கூறப்படுகின்றது. லியன் பொக்ஸ் அவர்களை இலங்கை மீதான மேற்கத்தைய நாடுகளின் இறுக்கத்தை தளர்த்த உதவும் படியும், அபிவிருத்திக்கு உதவும் படியும் கேட்பதற்காக மஹிந்த அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள லியன்பொக்ஸ் தான் வருவதென்றால் சரத் பொன்சேகா விடயத்தில் தளர்வு போக்கினை காட்டவேண்டும் என கூறியுள்ளார். இதன் அடிப்படையிலேயே வருகின்ற சனி கிழமை லியன் பொக்ஸ் இலங்கை செல்கின்றார் என பிரித்தானிய செய்திகள் தெரிவிக்கின்றன.