பொன்சேகாவுக்கு 5வருட சிறை! கோத்தாபாயவின் உத்தேச தீர்ப்பு

வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2010
Gotta
பொன்சேகா இராணுவ நீதிமன்றில் நிறுத்தப்படுவார். அவர் குற்றம் இழைத்துள்ளார். அவருக்கு ஐந்து வருடம் சிறை வழங்கப்படலாம். இவ்வாறு கோத்தபாய கூறியுள்ளார். இன்று சிங்கபூர் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில்  பொன்சேகா கைது பற்றி கூறியதுடன் அமெரிக்கா, நோர்வே ஆகியன பொன்சேகாவுக்கு தேர்தலிற்காக பணம் வழங்கியதாக கூறியுள்ளார்.

பொன்சேகா இராணுவ ஆட்சியினை கொண்டுவர விரும்பினார். தனக்கு ஆதரவான இராணுவத்திற்கு பதவி உயர்வு வழங்கி கொழும்பிற்கு கொண்டுவந்தார். இலங்கையில் ஒரு வித்தியாசமான ஆட்சியினை கொண்டுவந்து ஜன நாயகத்தை புதைக்கபார்த்தார். இதற்கு ஆதரவாக மேற்குலகமும் செயற்ப்பட்டது என கூறியுள்ளார் பொன்சேகா.

தன்னால் நோர்வே நிதி உதவி அளித்ததனை நிரூபிக்க முடியும் என கூறியுள்ள கோத்தா பொன்சேகாவுக்கு இராணுவ நீதிமன்றில் விசாரணை செய்து தண்டனை வழங்கப்படும் என கூறியுள்ளார். அத்துடன் லசந்த வின் கொலைக்கும் பொன்சேகா தான் காரணம் என கூறியுள்ளார் கோத்தா.

இவ்வளவும் பொன்சேகா செய்திருந்தால் ஏன் அவருக்கு CDS எனும் பதவி வழங்கவேண்டும்? உடனடியாகவே அவரை நீக்கி இருக்கலாம் தானே என விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.