பொன்சேகாவுக்கு வாக்களிப்பதன் மூலம் கிழக்கை முஸ்லிம்கள் ஆள முடியும் - ஹக்கீம்

ஞாயிற்றுகிழமை, ஜனவரி 17, 2010
Hakeem.Rauff
கிழக்கு மாகாண முஸ்லிம்கள் அனைவரும் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு  தெரிவிப்பதன் மூலம்  நாம் கிழக்கு மாகாண சபையினை ஆள முடியும். இவ்வாறு கூறியுள்ளார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்.
கிழக்கு மாகாணத்தில் சரத் பொன்சேகாவை ஆதரித்து நடாத்தப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசும் போதே இவ்வாறு கூறியுள்ளார் ஹக்கீம். கிழக்கு மாகாணத்தில் உள்ள  ஆயுத குழுக்களை கலைத்து விட்டு நாம் மாகாண சபையினை நிர்வகிக்க முடியும். அதற்கு நீங்கள் எமது திட்டத்திற்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்றார் ஹக்கீம். நாம் போட்ட திட்டத்தின் படியே நடக்கின்றது. அந்த திட்டம் உங்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றால் நாம் மாகாண சபையினை நிர்வகிப்போம் என்று மேலும் கூறினார் ஹக்கீம்.