திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
வன்னியில் அவசர அவசரமாக கட்டப்பட்ட இராணுவ சின்னங்கள் மீண்டும் இடிக்கப்பட்டு மீழ கட்டப்படுகின்றன. முன்னைய சின்னங்களில் சரத் பொன்சேகாவின் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தன. தற்போது அவை அனைத்தும் இடிக்கபட்டு மஹிந்தவின் பெயர் மட்டுமே பொறித்து கட்டப்படுவதாக கூறப்படுகின்றது. தமிழர்களை தோற்கடித்தது மஹிந்த மட்டுமே, அவரே பெளத்த நாட்டின் தந்தை என்ற கருத்தில் இந்த இடிப்பும் மீழ கட்டலும் இடம்பெறுவதாக சரத் ஆதரவாளர்கள் குமுறுகின்றனர்.