பிள்ளையான் வட பகுதியிலும் போட்டி

ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 21, 2010
Pillaiyaan
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடமாகாணத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருப்பதாக பிள்ளையான் கட்சி இன்று அறிவித்துள்ளது.
டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடன் தமது கட்சி நேரடிப் போட்டியில் களமிறங்கிறது எனவும் ஆசாத் மௌலானா தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தனது வேட்புமனு பத்திரத்தை கையளிக்கவிருப்பதாகவும் அவர் கூறினார். முதற் தடவையாக தமது கட்சி கிழக்கு மாகாணத்திற்கு வெளியில் போட்டியிடவிருப்பதாகவும் ஆசாத் மௌலானா சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி படகு சின்னத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.