பிள்ளையானின் இராணுவப் பாதுகாப்பு உடனடியாக வாபஸ்பெறப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 26, 2010
பிள்ளையானின் இராணுவ பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இராணுவப் பாதுகாப்பு வாபஸ்பெறப்பட்டதற்கான பின்னணிக் காரணங்கள் எதுவும் தெரியவில்லை என பிள்ளையான்  வட்டாரம்  தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தங்களது பிரதேசத்திலுள்ள பொலிஸ்மா அதிபரிடம் தெரிவிக்கவிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் அல்லாது, தனித்துப் போட்டியிடவிருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தீர்மானித்திருந்தது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி  முதன்முதலில் வடபகுதியில் போட்டியிட்டியிடுவதற்கு கடந்த வாரம் தீர்மானித்திருந்த அதேவேளை,  யாழ் குடாநாட்டில் தமது வெற்றியையும் உறுதிப்படுத்தியிருந்தது.

எதிர்க்கட்சிகளிடமிருந்து தாங்கள் இடையூறுகளை எதிர்நோக்கியிருந்ததாகவும் மேலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வாட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. வடபகுதியில் மோதல் ஏற்படலாம் என தாம் எதிர்பார்ப்பதாகவும், எனினும், எந்தவித சவாலுக்கும் தாம் தயார் எனவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.