பிலிப் அல்ஸ்டன் கூற்று சுதந்திரமானது என நழுவ பார்க்கும் பான்கி மூன்
செவ்வாய்க்கிழமை, ஜனவரி 12, 2010
மேலும் இலங்கையில் போர்குற்ற விசாரணையினை ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை அதற்கு உதவுவதற்காக நிபுணத்துவ குழுவினை அமைக்கவுள்ளதாகவும் அறிக்கைவிட்டார். இதே வேளை இலங்கை அரசாங்கம் பிலிப் அல்ஸ்டன் அவர்களின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மறு அறிக்கையும் விட்டது.
ஆனால் பிலிப் அல்ஸ்டன் மீண்டும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக கூறினார்.
இதே வேளை பிலிப் அல்ஸ்டனை கட்டுப்படுத்த இலங்கை இந்தியா ஊடாக மேற்கொண்ட முயற்சிகளும் தோற்று போனமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது ஐக்கிய நாடுகளின் சபை பொது செயலர் பான்கி மூன் அவர்கள் பிலிப் அல்ஸ்டனின் கருத்து சுதந்திரமானது என்றும் அது அவரது கருத்து என்றும் கூறியுள்ளார். அல்ஸ்டனின் கூற்றிற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று சற்று விலக பார்ப்பதாக கூறப்படுகின்றது.
பான்கிமூன் இது தொடர்பாக கருத்து கூறுகையில் பிலிப் அல்ஸ்டன் தனது கருத்தை சுதந்திரமாக விட உரிமை உண்டு அதே வேளை நான் எல்லோரினது அறிக்கையினையும் பார்க்கின்றேன். இலங்கை அரசு வெளியிட்ட எதிர் அறிக்கையினையும் பார்க்கின்றேன். அனைவரினது அறிக்கைகளையும் பார்த்து பரிசீலனை செய்து ஐக்கிய நாடுகள் சபை என்ன செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கும் என கூறியுள்ளார்.
பான்கி மூன் அவர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த உறுப்பினர்களுக்கும் இடையே பல விரிசல்கள் ஏற்பட்டுள்ளமை பற்றி ஏற்கனவே பல ஊடகக்ங்கள் சுட்டி காட்டியுள்ளன. ஈராக்கில் தனது மருமகனுக்கு ஐக்கிய நாடுகளின் உயர்பதவியினை பெற்று கொடுத்தது உட்பட பல ஊழல் குற்ற சாட்டுக்களும் இதில் அடங்குகின்றன. ஆகவே இலங்கை விடயத்திலும் பான்கி மூன், நம்பியார் ஆகியோர் இலகு தன்மையினை கடைப்பிடிப்பதற்கும் ஏதாவது காரணம் இருக்கலாம் என கூறப்படுகின்றது.
ஆனால் இலங்கை விடயத்தில் ஐ. நாவின் சில மூத்த அதிகாரிகள் உறுதியாக இருப்பதாகவும் எனினும் பான்கி மூன் அவர்களை எதிர்த்து எதனையும் செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி
















