வெள்ளிக்கிழமை, அக்டோபர் 9, 2009
பிரித்தானியாவில் குடுயுரிமை அல்லது வேலை அனுமதி பத்திரம் இன்றி வேலை பார்த்ததற்காக 10 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பிரித்தானியாவில் பைசெஸ்ரர் உணவு தயாரிப்பு நிலயம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருக்கும் போது பிரித்தானிய குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் அந்த துறையினை சேர்ந்த காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை நாட்டவர் என கூறப்படுகின்றது. கடந்த வருடம் பிரித்தானிய குடியகல்வு குடிவரவு அமைச்சர் கூட தனது வீட்டில் வேலை அனுமதி பத்திரம் இல்லாத ஓர் பெண்ணை வேலைக்கமர்த்தியமை கண்டு பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.