பிரித்தானியாவிலும் தேசிய தலைவரின் தந்தைக்கு மக்கள் அஞ்சலி

திங்கட்கிழமை, ஜனவரி 11, 2010
VP Farther
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வு 10-01-2010 மாலை 2:30 மணியளவில் Croydon Lanc France மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.அகவணக்கத்தோடு ஆரம்பித்த இந்த நிகழ்வில் ஈகச்சுடரினை அன்னாரின் பெறாமகன் திரு. அருணாச்சலம் இரட்ணசபாபதி அவர்களும், அன்னாரது பேத்தியார் சிந்துஜா வும் இணைந்து ஏற்றினர்.

அதனைத்தொடர்ந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ப. ஜெயானந்த மூர்த்தி அவர்கள் அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பெருந்திரளான மக்கள் வரிசையாக சென்று மலர்வணக்கம் செலுத்தினர்.

இந்த நிகழ்வில் த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ப. ஜெயானந்தமூர்த்தி அவர்களும், வெண்புறா நிறுவனர் டொக்டர்: மூர்த்தி அவர்களும், இன்னும் பல தமிழ்த்தேசிய உணர்வாளர்களின் உரைகளும், உணர்ச்சிக்கவிதைகளும் இடம்பெற்றன.அன்றைய தினம் லண்டன் வெஸ்ட் ஈலிங் பகுதியிலுள்ள ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் வீரத்தந்தையின் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

ஈகைச்சுடர் ஏற்றலை தொடர்ந்து அகவணக்கத்துடன் ஆரம்பித்த இந்த நிகழ்வில் மக்களின் மலர்வணக்க நிகழ்வைத் தொடர்ந்து தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் சிலரின் உறையும், தொலைபேசியூடாக யாழிலிருந்து த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிவாஜிலிங்கம் அவர்களின் உரையும் இடம்பெற்றது.இந்த வீரத்தந்தையின் வணக்க நிகழ்வில் உறை பனியுடன் கூடிய கடும் குளிரையும் பொருட்படுத்தாது நூற்றுக்கணக்கான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டிருந்தனர்.

VP Farther ninaivu.Aunty