பிரபாகரனை 2009 மாவீரர் உரை நடத்த விடமாட்டேன் என வாக்குறுதி அளித்தேன் அதனை செய்தேன் - காத்தான் குடியில் சரத்பொன்சேகா
செவ்வாய்க்கிழமை, ஜனவரி 5, 2010
இன்று காத்தான்குடியில் நடந்தெ தேர்தல் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சரத்பொன்சேகா இவ்வாறு கூறினார். இந்த யுத்தத்தில் கிழக்கு வாழ் இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் என்பதனை நான் அ|றிவேன். ஆனால் இனிமேல் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது காரணம் போர் ஓய்ந்துவிட்டது. ஆனால் மஹிந்த அரசு இப்போதும் போர் நடைபெறுவது போன்ற தோற்றப்பாட்டினை காட்டுகின்றது. என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை 55 வீத வாக்குகளை பெற்று சரத்பொன்சேகா வெற்றிபெறுவார் என ஐக்கியதேசிய கட்சியின் பொதுசெயலர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி
















