பான்கி மூன் குழு அமைப்பது தொடர்பில் மஹிந்த அதிருப்தி

ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
பான்கிமூன் தனக்கு இலங்கை தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக குழுவொன்றினை அமைக்கப்போவதாக கூறியதற்கு மஹிந்த அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இந்த செயற்பாடானது இலங்கைக்கு என விசேடமாக மேற்கொள்வதாகவும் இவ்வாறான பரிட்சயங்கள் முன்னெப்போதும் செய்யப்படவில்லை என்றும் மஹிந்த கூறியுள்ளார்.
ஆனால் இந்த குழுவானது இலங்கைக்கு நேரடியாக ஆலோசனை வழங்காது என்றும் மாறாக தனக்கே ஆலோசனை வழங்கும் என பான்கி மூன் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறு இருப்பினும் ஐ. நா வின் இந்த செயற்பாடானது தேர்தல் நெருங்கும் காலகட்டத்தில் மஹிந்தவுக்கு கஸ்டங்களை கொடுக்கும் என எண்ணியே மேற்குலகத்தால் செய்யாப்படுகின்றது. ஆனால் மஹிந்த இதனையே ஆயுதமாக கொண்டு தேர்தலில் அதிகபலத்தினை சிங்கள மக்களிடம் கோரலாம். அதில் பெரும் வெற்றியும் பெறலாம்.