பசுபிக் நாடுகளில் தொடர்ந்து சுனாமி எச்சரிகைகள்

வியாழக்கிழமை, அக்டோபர் 8, 2009
Earth quake
பசுபிக் நாடுகளான சுமார் 25 நாடுகளில் சுனாமி எச்சரிக்கைகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. அங்கு கடற்பகுதியில் கடந்த இரு வாரங்களாக ஏற்படும் நில அதிர்வுகளால் அண்மையில் இந்தோனேசியா, பாலி, சுமாத்திரா, நியூசிலாந்து, யப்பான் ஆகிய நாடுகளில் பெரும் சேதம் ஏற்பட்டது 2000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். கடலடுக்கு அடியில் மேலும் பூமி அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்புஇருப்பதனால்  மக்களை தொடர்ந்து உயர் நில பகுதிகளில் தங்கி இருக்குமாறு வேண்டப்பட்டுள்ளனர்.