நாளை செட்டிக்குளம் முகாமில் ஊனமுற்ற போராளிகள் விடுதலை

செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
LTTE carder
நாளை 10 ஆம் திகதி 11.30 மணியளவில் செட்டிக்குளம் முகாமில் இருந்து ஊனமுற்ற போராளிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். இவர்களை பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் வந்து பொறுப்பெடுத்து செல்லமுடியும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பாக விடுதலை செய்யப்படும் போராளிகளின் பெற்றோர்கள், பாதுகாவலர்கள், துணைவியர்களுக்கு அந்த போராளிகள் ஊடாக கடிதங்கள் அனுப்பபட்டுள்ளன. ஆகவே அவர்கள் நாளை காளை 11. 30 மணியளவில் செட்டிக்குளம் முகாமுக்கு வருமாறு கூறப்பட்டுள்ளது.