நமல் இராசபக்‌ஷவின் அணிக்கு 10 அமைச்சுக்கள் இப்போதே ஒதுக்கப்பட்டுள்ளது!

ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
அம்பாந்தோட்டையில் போட்டியிடும் நமல் இராசபக்‌ஷ அணியினருக்கு  இப்போதே முக்கிய 10 அமைச்சுக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அடுத்த பாராளுமன்றில் அமைச்சுக்களின் எண்ணிக்கையினை குறைத்து முக்கியமானவர்களுக்கே வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இதன் படி 35 கபினெற் அமைச்சுக்களே இடம்பெறும் எனவும் இந்த பதவிகளுக்கு கட்சியின் மூத்த அமைச்சர்கள், மஹிந்த விசுவாசிகளே நியமிக்கப்படுவர். மேலும் ஏனையோருக்கு திணைக்களங்களின் தலைவர் பதவிகளை வழங்கி உட்பூசல்களை சமாளிக்க மஹிந்த முடிவு செய்துள்ளாராம்.
அமைச்சர்களை நியமிப்பதில் மஹிந்தவின் புதல்வர் நமல் இராசபக்‌ஷவின் குழுவினருக்கு 10 அமைச்சுக்கள் ஒதுக்கப்படும். இந்த 10 அமைச்சுக்களையும் நமல் இராசபக்‌ஷ பிரித்துக்கொள்வாராம்.