தேசிய தலைவரின் தாயார் சிறிலங்காவை விட்டு வெளியேறினார்

ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
தமிழீழ தேசிய தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களின்  தாயார் பார்வதி வேலுப் பிள்ளை வெளிநாட்டுக் நேற்று பயணமானார். பனாகொடை இராணுவ முகாமில் அவரது கணவனுடன் இவர் தடுத்து வைக்கப் பட்டிருந்தார்.  வேலுப்பிள்ளை ஐயா காலமானதை அடுத்து அவர் இறுதிக்கிரியைகளுக்காக வல்வெட்டித்துறைக்கு சென்றார்.

சுகவீனமுற்றிருந்த பார்வதி அம்மா சிறிது காலம் அங்கு தங்கி யிருந்தார். பின்னர் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் அவர் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு பம்பலப்பிட்டியில் உள்ள விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
சிவாஜிலிங்கம் செய்த பயண ஒழுங்குகளை அடுத்து நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவர் வெளிநாடு ஒன்றுக்கு புறப்பட்டுச் சென்றார்.